![]() |
படம் 1 |
![]() |
படம் 2 |
முறத்தால் புலியை விரட்டிய...
முலையறுத்து வரிமறுத்த...
முன்னிருந்து படைநடத்திய...
முத்தமிழில் புலமை படைத்த...
மூதாதை வம்சம் வாழ்வித்த..
கைநாட்டும் காலத்திலும் தம்
பேர்நாட்டிய பாட்டி பூட்டிகளோடு
முடக்கப்பட்டு மூலையிற்கிடந்த…
முக்காட்டுக்குள் வாழ்வு புதைத்த…
இருண்ட கட்டுக்குள் சிறைப்பட்ட..
இருப்பும் மதிப்பும் உணரப்படாத..
செல்லாக்காசென ஜீவித்துமடிந்த..
எல்லாக்கிழவிகளையும் நினைவுகூர்வோம்..
b
![]() |
படம் 3 |
![]() |
படம் 4 |
![]() |
படம் 5 |
![]() |
படம் 6 |
![]() |
படம் 7 |
இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்…
(மகளிரையும் மகளிர் தினத்தையும் சிறப்பிக்கும்வண்ணம் ஃபேஸ்புக்கில் மங்கை குழுமத்தின் பெருமுயற்சியில் என் சிறு பங்களிப்பு.. அங்கத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையும் படங்களையும் கொண்டு என்னால் உருவாக்கப்பட்ட கொலாஜ்களே இவையனைத்தும் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.)
உருவாக்கப்பட்ட கொலாஜ்கள் அனைத்தும் மிகவும் அருமை...
ReplyDeleteஇனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்...
அன்பும் நன்றியும் தனபாலன்.
Deleteமகளிர்தின வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஐயா.
Delete’அம்மு’ முதல் ’யமுனா’ வரை அந்தக்கால மூதாதையரான பாட்டிகளின் பெயர் பட்டியல் அட்டவணை அருமை.
ReplyDelete’முறத்தால் புலியை விரட்டிய...’ போன்ற அனைத்து வீரத்தாய்களையும் நினைவுகூர்ந்த பாடல் இனிமை.
தங்களால் உருவாக்கப்பட்டுள்ள கொலாஜ்களை பார்க்க எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதுவும் Drop Drop ஆகக் காட்டியுள்ள அந்தக்கடைசி படம் Save Water - Save Earth Excellent ! :)
இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்.
எல்லாவற்றையும் மிகவும் நுட்பமாக கவனித்து அதை பின்னூட்டத்தின் வாயிலாகவும் தெரிவித்துப் பாராட்டியதற்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார்.
Deleteநேரமெடுத்து அக்கறையுடன் செய்யப்பட்டிருக்கும் கொலாஜ் அனைத்திலும் உங்கள் உழைப்போடு அன்பும் வெளிப்படுகிறது. நன்றி. மகளிர் தின வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
Deletebe bold for change என்று எழுதி இருக்கிறது ஆண்களா பெண்களா யாருக்கு அந்த மெசேஜ் மாற்றங்கள் இருக்கிறது அவை நல்வழியில் இருக்கவேண்டும் அக்கறையுடன் எழுதிய பதிவுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா.. Be bold for change - என்பதற்கான விளக்கத்தை தோழி ராமலக்ஷ்மி தன் பதிவில் தெளிவாக விவரித்துள்ளார். அதையே இங்கு தருகிறேன்.
Delete\\ 1913-ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் தின அமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்டக் கருவை அந்நாளுக்காக அறிவித்து வந்தபடி இருக்கிறார்கள். இந்த ஆண்டு ‘மாறி வரும் பணி உலகில் மகளிர் – 2030-ல் பிளானட் 50-50’ எனும் குறிக்கோளை எட்டும் விதமாக #BeBoldForChange கரு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு நம்மை அல்லது மகளிரை அதற்கான முயற்சிகளை எடுக்க அழைப்பு விடுக்கிறது. இந்தக் கருவானது ஐநா அமைப்பின் 2030ஆம் ஆண்டுக்கான செயல்திட்டமான இருபாலினருக்கும் சம உரிமை, பெண்களுக்கான அடிப்படை உரிமைகள், அவர்கள் தங்களின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்திடுவதற்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு முன்னேறப் பாதை அமைக்கிறது. பாலினம் சார்ந்த பிரச்சனைகள், தரமான இலவசக் கல்வி, இளம்பிராயத்திலேயே குழந்தைகளின் மேம்பாட்டுக்கு அடிகோலுவது, பாலின வேறுபாடுகள் பாகுபாடுகள், விரும்பத்தகாத பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றைக் களைந்து புதிய கோளை 2030ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப் பாடுபட அனைவரையும் அழைக்கிறது ஐநா-வின் பெண்கள் அமைப்பு. \\
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான படைப்பு, இப்பூடி ஐடியாவெல்லாம் பெண்களால்தான் முடியும்... ஹா ஹா மகளிர் தினமென்பதால் யாரும் திட்டமாட்டினம் என்னை:). வாழ்த்துக்கள் கீதா.
ReplyDeleteஹா.. ஹா.. நாமே நம்மை பாராட்டிக் கொள்ளவில்லையென்றால் எப்படி.. அன்பும் நன்றியும் அதிரா.
Deleteமகளிர் தின நலவாழ்த்துக்கள் இரண்டாவது படம் வடிவமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது குட்
ReplyDeleteமிகவும் நன்றி மதுரைத்தமிழன். நிறைய மாற்றி மாற்றி செய்து பார்த்ததில் இந்த வடிவமைப்பு முடிவானது..
Deleteபெருமிதம் தோழி!
ReplyDeleteஅன்பும் நன்றியும் நிலாமகள்.
Deleteஏழாவது படம் பொருத்தமாயிருக்கிறது. வடிவமைப்பிற்குப் பாராட்டுகள் கீதா!
ReplyDeleteஏழாவது படம் உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி. அன்பும் நன்றியும் அக்கா.
Deleteவடிவமைப்புகள் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்களுக்கும் இனிய வாழ்த்துகள் மேடம்.
Deleteமகளிர்தின சிறப்பு பதிவு அருமை.
ReplyDeleteநன்றி மேடம். :))
Deleteஅருமையான வடிவமைப்பு கீத்ஸ். நன்றியும் பாராட்டுகளும் டியர் :)
ReplyDeleteஅன்பும் நன்றியும் தேனம்மை. :))
Delete