24 October 2016

வண்ணங்களாலொரு வடிகால்


வளர்ந்துவிட்டதால் மாத்திரமே குழந்தைப்பருவ சந்தோஷங்களைத் துறந்துவிடவேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்னவண்ணந்தீட்டும் புத்தகங்கள் குழந்தைகளுக்கானது என்ற நிலை மாறி பெரியவர்களுக்கும் இப்போது அறிமுகமாகியுள்ளன. மறுபடி குழந்தைப்பருவத்துக்கு அழைத்துச்செல்லும்குழந்தைகளைப் போலவே குதூகலிக்கவைக்கும்.. வண்ணந்தீட்டி மகிழ்வோமா நாமும்?


படம் 1

படம் 2

படம் 3



வண்ணந்தீட்டுவதால் மகிழ்ச்சி மட்டுமா கிடைக்கிறது? நம்மை நாமே அடையாளங்காண முடிகிறது. வருடக்கணக்காக மனத்தின் ஆழத்தில் அடைபட்டுக்கிடக்கும் நம் படைப்பாற்றலையும் கலையுணர்வையும் மெல்ல வெளிக்கொணரமுடிகிறது..


படம் 4

படம் 5

படம் 6


நோய், வலி, உளக்கவலைகளை மறக்கச்செய்கிறது.. மன அழுத்தம், படபடப்பு, மனச்சோர்வு, விரக்தி, தனிமை, எரிச்சல், கோபம், பசியின்மை, உறக்கமின்மை போன்ற பல உளப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக மருத்துவர்கள் சமீபகாலமாக நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் கலர் தெரபி சிகிச்சையில் வண்ணந்தீட்டும் புத்தகங்கள் சமீபகாலமாக முக்கிய இடம்பெற்றுள்ளன.


படம் 7

படம் 8

படம் 9



வண்ணங்கள் மனத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு மனதுக்குகந்த நிறங்களைத் தேர்ந்தெடுக்கையில் ஒரு உற்சாகப்பரவசம் உண்டாகிறது.. தீட்டி முடித்த வண்ணப்பக்கங்களைப் பார்க்கும்போதுஅட, நானா இவ்வளவு அழகாக வண்ணந்தீட்டியிருக்கிறேன், சபாஷ்என்று நமக்குள்ளே ஒரு பெருமிதம் மிளிரும்..



படம் 10


படம் 11

படம் 12


அடைப்பை விட்டு வெளியே வராமல் சிரத்தையோடும் கவனம் சிதறாமலும் வண்ணந்தீட்டும்போது நமக்கேற்படும் நிதானமும் பொறுமையும் ஆழ்நிலைதியானத்தைப் போல மனத்தை அமைதிப்படுத்தும். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தும். சுணக்கமான பொழுதொன்றில் என் அன்புத்தோழி மணிமேகலா எனக்குப் பரிசளித்த புத்தகத்தில் நான் தீட்டிய சில பக்கங்கள்தான் இவை... 


படம் 13

படம் 14

படம் 15


இதுபோன்ற புத்தகங்கள் ஸ்டேஷனரி கடைகளிலேயே கிடைக்கின்றன.. கிடைக்கவில்லையா.. கவலை எதற்கு.. நாமே நம் எண்ணம்போல் வடிவங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டலாமேகற்பனை சிறகு விரிய வானமா தடைபோடப்போகிறது? நம் உள்ளே குமையும் உளைச்சல்களுக்கெல்லாம் எண்ணிலா வண்ணங்களால் வடிகால் அமைத்து எண்ணத்தில் மகிழ்வு கூட்டி இனிதாய் வாழ்வோமா இனி? 



35 comments:

  1. இன்றைக்கு தேவையான பதிவு. வண்ணத் தீட்டல்கள் அருமையாக இருந்தது.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி செந்தில்.

      Delete
  2. அழகு கீதா! நானும் வாங்கி வண்ணமிட்டேன்..மனதிற்கு இதமாக இருந்தது. கோலம் போடத் துவங்கிவிட்டேன். :))

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ். நிச்சயமாக ஒவ்வொருவருக்குள்ளும் அதிசய மாற்றத்தை உண்டாக்கும் கலை. கோலம் எனக்கும் மிகவும் பிடித்த விஷயம். ஃபோனில் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கையிலும் கை தன்னால் எதையாவது வரைந்து தள்ளிக்கொண்டிருக்கும்.

      Delete
    2. வாவ்!! பல்சுவை திறமைசாலி நீங்கள் :)

      Delete
  3. வர்ணம் தீட்டியுள்ள ஒவ்வொரு படமும் அழகாகத்தான் உள்ளது. டாப்-இல் காட்டியுள்ள இறகுகள் படம் மிகவும் டாப்-ஆக உள்ளது. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபு சார். அந்தப் படம்தான் எனக்கும் மிகவும் பிடித்த படம். அதனால்தான் அதை முதலில் வைத்தேன். உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று அறிய கூடுதல் மகிழ்ச்சி. :)))

      Delete
  4. ஒவ்வொரு படத்துக்கும் அருகே எழுதியுள்ள ஸ்லோகன்ஸ் சூப்பராக உள்ளது. அதைவிட அந்தக் கையெழுத்து (ஹாண்ட் ரைட்டிங்) மிகவும் அழகாக எனக்குப் பிடித்ததாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கையெழுத்தைப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி கோபு சார். இப்போது கையால் எழுதும் வேலையே இல்லை என்பதால் எழுத்து மாறிவிட்டது. இதைவிடவும் அழகாக இருக்கும் என் முந்தைய கையெழுத்து.

      Delete
  5. மேலிருந்து கீழாக படம் எண்: 1, 3, 4, 5 & 11 பளிச்சென்றும், கூடுதல் அழகாகவும் உள்ளன.

    No. 5 is Something Special. இலைகளுக்கான ஒரே பச்சை நிறத்தினை, லைட்டாகவும், டார்க்காகவும் கொடுத்து பிரித்துக்காட்டியிருப்பது அற்புதம் + அட்டகாசம். என் ஸ்பெஷல் பாராட்டுகள், மேடம். :)

    ஒவ்வொன்றிலும் பொடிப்பொடியா பார்த்துப்பார்த்துப் பல்வேறு வர்ணங்கள் தீட்ட எவ்வளவு ஒரு பொறுமையும், மனம் ஒன்றிய தியான நிலையும் வேண்டியிருந்திருக்கும் !!!!!

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார். உங்களுடைய இந்தப் பின்னூட்டம் பார்த்தபிறகுதான் அடடா, படங்களுக்கு எண் கொடுக்கவில்லையே என்று தோன்றியது. உடனே கொடுத்துவிட்டேன். நன்றி சார். கடந்த சில மாதங்களாக இணைய இணைப்பு இல்லாமையும் இந்தப் பொறுமைக்கு ஒரு காரணம். இன்னும் தீட்டவேண்டிய பக்கங்கள் நிறைய உள்ளன. அவ்வப்போது என்னை உற்சாகப்படுத்திக்கொள்ள ஒரு பக்கத்தை எடுத்து வண்ணந்தீட்டுவேன்.

      Delete
  6. வண்ணம் தீட்டி இருப்பதும், அதற்கு நீங்கள் கொடுத்த கவிதை வரிகளும் அருமை.
    கோலத்திற்கு வண்ணம் வெளியில் சிந்தாமல் வர்ணம் கொடுப்போம். அது போல் வண்ணம் தீட்டும் போது அவுட்லைன் விட்டு வெளிவராமல் கவனமாய் வர்ணம் தீட்டும் போது மனம் லயிக்கிறது என்பது உண்மைதான் கீதமஞ்சரி. என்னிடமும் வர்ணம் கொடுக்கும் புத்தகம் இருக்கிறது வர்ணம் கொடுக்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். கோலம் போடுவதும் இதுபோல் மனத்தை அமைதிப்படுத்தும் ஒரு கலைதான். ஆனால் காலைப்பொழுதுகளில் வீட்டுக்குள் நிறைய வேலைகள் இருக்கும்போது அவசரமாய்ப் போட்டுவிட்டுப் போகத்தான் நினைப்போமே தவிர ஆற அமர நம் விருப்பத்துக்குப் போட இயலாது. வண்ணப்புத்தகம் எனில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தமுடியும். அதுதான் இதிலுள்ள கூடுதல் வசதி.

      Delete
  7. கலர் தெரபி சிகிச்சை - ஒரு புதிய தகவலைத் தந்திட்ட சகோதரிக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இது புதிய தகவல்தான். இதைப் பற்றி மேலும் அறியும்போது வியப்பு அதிகரித்துக்கொண்டே போவது உண்மை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. a creative work
    gives your mind a divine feeling...ji

    ReplyDelete
  9. வண்ணங்கள் அருமை. ஒருவருடைய குணத்தை நிர்ணயிப்பதில்கூட வண்ணங்களின் பங்கு அதிகம் என்பார் என் நண்பர் ஒருவர். ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா... தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  10. வண்ணங்கள் அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  11. வண்ணங்களும் எண்ணங்களும் அருமை.
    நல்ல ஆலோசனை . தனிமையில் வாடும் என் மனைவிக்கு அறிமுகப்படுத்த இருக்கிறேன். நன்றி சகோதரி

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நல்ல பலனளிக்கும். ஆனால் அது மட்டுமே போதாது.. அவர்கள் தனிமையைப் போக்க தங்கள் பக்கத்துணையும் அவசியம்.. அதையும் இனிதே செயல்படுத்த இனிய வாழ்த்துகள்.

      Delete
  12. வணக்கம்.

    ஓவியம் தீட்டுபவர்களைக் கண்டு வியப்பதுண்டு. அவர்கள் என் மாணவர்களாயினும்.

    என் அண்ணன் ஒரு தேர்ந்த ஓவியர். தேர்ந்த என்பதன் முன் மிக மிக என்ற அடைமொழியைச் சேர்க்கும் அளவிற்கு.

    எனக்கோ ரசனை மட்டுமே!

    அதற்கான பொறுமை சிறிதும் இல்லை என்பதே உண்மை


    முதலில் ஆங்கில வரிகளுக்கான உங்கள் தமிழாக்கம் மிக அருமை.

    வண்ணப்படங்களை ரசித்தேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசனை இருப்பவர்களாலேதானே திறமை இருப்பவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்க முடிகிறது. தங்கள் சகோதரருக்கு என் பாராட்டுகள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜி சார்.

      Delete
  13. வாவ்.....!
    வர்ணமும் வார்த்தைகளும் சொட்டச் சொட்ட காகிதத்திலே கலை வண்ணம்.......
    அதற்குள் ஊடுருவி நிற்கும் வண்ணத் தெரிவுகளும் தமிழ் பெயர்ப்புகளும் அருமை பெண்ணே!

    விரிக நின் பார்வைகள் இது போல....

    ReplyDelete
    Replies
    1. இப்படியொரு இனிய பரிசை அளித்த அன்புத்தோழிக்கல்லவோ அத்தனைப் பெருமையும்.. நன்றி தோழி.

      Delete
  14. அழகாய் இருக்கின்றன வண்ணங்களும், அருகில் உள்ள வரிகளும்!!

    இப்படியான புத்தகங்களை லயா-வுக்கு அவங்கப்பா வாங்கிவந்தார்...இட்ஸ் டூ எர்லி ஃபார் ஹர் ஏஜ்-னு ரிடர்ன் பண்ணிட்டேன். வண்ணந்தீட்ட (எனக்கு) நேரம் கிடைக்கும் காலங்களில் கட்டாயம் தொடரவேண்டும் என்று அப்போதே மனதுள் நினைத்துக்கொண்டுதான்!! :)

    ReplyDelete
    Replies
    1. எதிலுமே ஈடுபாடற்ற பொழுதில் நிச்சயம் மனதுக்கு இதமளிக்கும் என்றாலும்... உங்களைப் போல வேறு வேறு கைத்திறமைகளில் பரிச்சயம் இருக்கும்போது இதெல்லாம் தூசுதான் மகி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.

      Delete
  15. எந்த ஒரு கைவினைச் செயலும் மனசை ரிலாக்ஸாகச் செய்யும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா.. தஞ்சாவூர் பாணி ஓவியங்களிலேயே உங்கள் திறமையைக் கண்டு அசந்திருக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. இது போல் வண்ணந்தீட்டும் புத்தகங்கள் பெரியவர்களுக்கும் கிடைக்கின்றன என்பது நான் அறியாத செய்தி. வண்ணம் தீட்டும் போது நம் எண்ணங்களுக்கு ஒரு வடிகால் கிடைப்பது உண்மை தான். வண்ணம் தீடிய படங்களும் அதற்குரிய கருத்துக்களும் அருமை. இதைப் பார்த்தவுடன் உடனே வண்ணந்தீட்ட வேண்டும் என்ற ஆவல எனக்கும் ஏற்படுகின்றது. பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா... மனச்சோர்வுற்ற பொழுதுகளில் நமக்கென்று எந்த பொழுதுபோக்கும் அல்லது பிடிப்பும் இல்லாத பட்சத்தில் இவை மிகவும் உதவும் என்றாலும் பிசியான பொழுதுகளில் கூட நம்மை ரிலாக்ஸ் செய்யவும் உதவும்.

      Delete
  17. எங்க பாப்பா குட்ட்ட்டியா இருந்தப்போ வாங்கிய வண்ணம் தீட்டும் புத்தகங்களில் பெரும்பாலான பக்கங்களில் என் கைவண்ணம்தான் இருக்கும். இன்றைக்கும் கடைக்குப் போனால் இது மாதிரி புத்தகங்கள் ஒன்றிரண்டு வாங்காமல் வரமாட்டேன்.

    இங்கும் டிவி விளம்பரங்களில் இது வந்துகொண்டிருக்கிறது.

    தீட்டிய வண்ணங்களும், வாசகங்களும் அழகா இருக்கு கீதா !

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய உற்சாகத்துக்குப் பின்னாலிருக்கும் ரகசியம் இப்போது புரிகிறது. :))

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா...

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.