வித்திடாமல்..
விதை தூவாமல்…
நிலங்கொத்திவிடாமல்..
நீர்த்துளி
வேண்டாமல்..
உரமேதும் கேளாமல்…
உறுவேலி காவாமல்…
களையெனவும் காட்டுத்தழையெனவும்
விளைந்தெங்கும் வளர்ந்து செழித்து
மண் மறைத்து மலர்ந்து சிரித்து
கண் நிறைக்கும் கவின்மலர்கள்…
pic 1 - capeweed flowers |
pic 2 - scarlet pimpernel flowers |
pic 3 - bindweed flowers |
pic 4 - wild mustard flowers |
pic 5 -sticky nightshade flowers |
pic 6 - purple top flowers |
pic 7 - ribwort plantain flowers |
pic 8 paterson's curse flower (purple) bird's foot flower (yellow) common wireweed flower (pale yellow) tick clover (pink) |
pic 9 - some wild grass heads |
pic 10 onion weed flower (top left) black nightshade (top right -மணித்தக்காளிப்பூ) whorled rosinweed flower (yellow) scurvy weed flower (blue) |
இணையத்தின் உதவியால் பூக்கள் மற்றும் செடிகளின் பெயர்களை ஓரளவு தேடிக்கண்டுபிடித்து எழுதியுள்ளேன். எவரேனும் எதுவேனும் தவறெனக் காணின் திருத்தக் கோருகிறேன். நன்றி.
ஊட்டியில் மலர் கண்காட்சி நடத்துவதற்கு போட்டியாக உங்கள் தளத்திலே அழகாக நடத்தி காட்டிவிட்டீர்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரைத்தமிழன். ஊட்டி மலர்க்காட்சி பராமரிப்புக்குட்பட்டது. இவையோ பராமரிப்பு தேவைப்படாத காட்டுப்பூக்கள்.. ஆனாலும் அழகில் குறைவைப்பதில்லை.. உண்மைதான்.
Deleteமலர்களும் அழகு, கவிதையும் அழகு .
ReplyDeleteகண் நிறைக்கும் கவின் மலர்கள்தான்.
வருகைக்கும் பூக்களையும் கவிதையையும் ரசித்தமைக்கும் நன்றி கோமதி மேடம்.
Deleteபுகைப்படங்களுக்கு ஏற்ற கவிதைகள். மிகவும் அருஐம.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Delete'தான்தோன்றிப் பூக்கள்' கவிதைக்குப் பொருத்தமான தலைப்.....’பூ’ !
ReplyDeleteதலைப்’பூ’வுக்குப் பொருத்தமான மகரந்தம் போன்ற கவிதை வரிகள் !!
படங்கள் எல்லாமே நன்னா இருக்கு ..... அதுவும் முதல் படம் பளிச்சோ ப..ளீ..ச் !!!
வரிக்கு வரி உங்கள் ரசனை வெளிப்படுகிறது. மிகவும் நன்றி கோபு சார்.
Deleteஅழகிய பூக்கள்.... நிறைய பூக்களை சேர்த்து பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.
Deleteஎவ்வளவு தெளிவான புகைப்படங்கள்...!
ReplyDeleteஅதனோடு கவிமஞ்சரியும் அருமை.
சிற்றிலக்கியங்களில் மஞ்சரி என்ற ஒருவகையுண்டு.
த ம
தொடர்கிறேன்.
\\சிற்றிலக்கியங்களில் மஞ்சரி என்ற ஒருவகையுண்டு.\\ கேள்விப்பட்டிருக்கிறேன் விஜி சார். வருகைக்கும் தகவலுடனான கருத்துரைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி.
Deleteபூக்களின் படங்களும் கவிதை வரிகளும் அழகு! தானாய்த் தோன்றினாலும் எத்தனை வண்ணங்கள்! பகிர்வுக்கு நன்றி கீதா!
ReplyDeleteவருகைக்கும் களைப்பூக்களை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.
Deleteகருத்தான கவிதையும் உள்ளங்கவர் படங்களும் மனதைக் கவர்ந்தன. இயற்கை இந்த மண்ணுக்கு அளித்த கொடை இந்த மலர்கள்.
ReplyDelete