2 October 2015

கவின்மிகு அழைப்பைப் பாரீர்... இனிதே வருகை தாரீர்..



எண்ணப்பறவை சிறகடித்து 
விண்ணில் பறக்கின்றதே..
பண்ணோடதுவும் புதுகையேகும் 
பாதை பார்க்கின்றதே…

அழைப்பிதழ்கண்டு அகந்தனிலின்று
ஆர்வம் பிறக்கின்றதே...
பிழைப்பதனாலே போகவியலாமையாலே
மனமது மலைக்கின்றதே...


பதிவர் யாவும் ஒன்றாய்க்கூடும் 
பரவசம் புரிகின்றதே…
உதயமாகும் உற்சாகவெள்ளம் 
என்னிதயம் நனைக்கின்றதே…

நிறையவிருக்கும் அரங்கம்கண்டு 
நெகிழ்ந்து மகிழ்கிறதே…
சிறந்ததொரு நிகழ்விதுவென்று 
சிந்தையும் நிறைகிறதே…


கண்ணயரா உழைப்பு காட்சிப்படுத்தும் 
கவின்மிகு அழைப்பைப் பாரீர்….
எண்ணமது நிறைக்க எழுத்துலகு சிறக்க 
இனிதே வருகை தாரீர்…

அரும்பெரும் பணிகள் அரங்கேறக்கண்டு
ஆனந்தம் அடைந்திடுவோம்..
கரமதுகூப்பி விழாக்குழுவினர்தம்மை
வணங்கி வாழ்த்திடுவோம்...


17 comments:

  1. பாடல் மூலமாய் வாழ்த்தியும் அழைத்தும் இருக்கும் விதம் அருமை சகோ
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  2. ஆஹா அருமை ....மா நன்றிமா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனைவரின் உழைப்புக்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்? நன்றி கீதா.

      Delete
  3. சகோதரியின் அழைப்பிதழுக்கும் கவிதைக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.. விழாவில் பங்கேற்கவிருக்கும் தங்களுக்கு இனிய வாழ்த்துகள்.

      Delete
  4. போக நினைத்தாலும் போக இயலாத சூழ்நிலையை பற்றி பாடும் பாடல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. மனமெல்லாம் நிகழ்வு குறித்தே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறையாவது வாய்ப்பு அமைகிறதா என்று பார்ப்போம். நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  5. கவின்மிகு அழைப்பைக் கண்டோம்
    தங்கள் பதிவின் மூலமும்
    மகிழ்வது நிறையக் கொண்டோம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  6. ஆஹா! மகிழ்வையும் போகவியலா ஏக்கத்தையும் சொல்லும் அழகுக்கவி
    அருமை கீதமஞ்சரி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ். நம்மைப் போல் போக இயலாதவர்கள் எல்லாம் ஏக்கத்தை எழுத்தாய்தானே பதிவு செய்து மனத்தைத் தேற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

      Delete
  7. கவிதையில் அழைப்பு மிக அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  8. அழகான கவிதை மூலம் அழைப்பு விடுத்தமை மிகவும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா.. விழாவில் பங்கேற்கவிருக்கும் தங்களுக்கு இனிய வாழ்த்துகள்.

      Delete
  9. உடனுக்குடன் செயல்படும் உங்கள் வேகம் மலைக்கவைக்கிறது. நன்றி தனபாலன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.