ஆஸ்திரேலியாவுக்கு
கிழக்கே சுமார் 1750 கி.மீ. தொலைவில் உள்ளது வனுவாட்டு குடியரசு. எரிமலைகளால் உருவான
எண்பதுக்கும் அதிகமான தீவுக்கூட்டங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் 65 ஆளரவமற்றவை.
வனுவாட்டு குடியரசைச் சார்ந்த, மக்கள் வசிக்கும் தீவுகளுள் ஒன்று அம்பிரைம். தொடர்ச்சியான எரிமலைக் குழம்புகளால்
தீவு முழுவதும் கருப்பாக காணப்படுவதால் கருந்தீவு என்ற பெயரும் இதற்குண்டு.
அம்பிரைம் தீவுவாசிகளுடைய
பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான atingting எனப்படும் இந்த பிளவு முரசு, அவர்களுடைய பாரம்பரிய விழாக்களின்போதும், நடனங்களின் போதும், தகவல் பரிமாற்றத்துக்காகவும்,
ஊர்மக்களை ஒன்றுதிரட்டவும் ஒலிக்கப்படுகிறது. Pacific Teak (Intsia bijuga) எனப்படும்
இப்பில் மரத்தின் தண்டைக் குடைந்து உருவாக்கப்படும் இந்த இசைக்கருவியின் வெளிப்புறத்தில்
மெல்லிய வலுவான குச்சிகளைக் கொண்டு தட்டுவதன்மூலம் அதிர்வொலி எழுப்பப்படுகிறது.
படத்தில் காட்டப்பட்டிருக்கும்
பிளவு முரசு அம்பிரைம் தீவிலிருந்து நட்புறவின் அடையாளமாக இருபத்துமூன்று வருடங்களுக்கு
முன்பு ஆஸ்திரேலியாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாம். சிட்னியின் பிரதான தாவரவியல் பூங்காவில் மரங்களோடு மரங்களாய் இசைப்பாரின்றி நின்றுகொண்டிருக்கிறது, இந்த அழகிய கலைநயம் கொண்ட பிரமாண்ட பிளவு முரசு.
&&&&&
வித்தியாசமான இசைக்கருவியாக இருக்கிறது! புதிய தகவல்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteபுதுமையான விடயமாக இருக்கிறதே... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 1
ரசித்ததற்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteஇசைப்பாறின்றி பிளவு முரசு
ReplyDeleteவேதனைதான் சகோதரியாரே
இசைக்கத் தெரியவேண்டுமே ஐயா. அதனால்தான் காட்சிப்பொருளாய் நிற்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஇதுவரை கேள்விப்படாத இசைக்கருவி! புதுமையான செய்தி! தகவலுக்கு நன்றி கீதா!
ReplyDeleteஆமாம் அக்கா. எனக்கும் இது புதிய தகவல்தான். பலமுறை பார்த்திருந்தாலும் இது ஒரு இசைக்கருவி என்றே எனக்குத் தெரியவில்லை. கலைநயத்துடனான காட்சிப்பொருள் என்றே நினைத்திருந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.
Deleteஇன்று ஒரு தகவல் போல இன்று ஒரு விஷயம் அறிந்தேன். நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteஇதைப் பார்த்ததும் நம்ம ஊர் பஞ்சமுக வாத்தியம் எனக்கு நினைவிற்கு வந்தது. நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. பஞ்சமுக வாத்தியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. இப்போது புழக்கத்தில் இல்லை என்று நினைக்கிறேன். சரிதானா ஐயா?
Deleteஅறியாத தகவல். படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteஇதுவரை கேள்விப்படாத வித்தியாசமான இசைக்கருவி. அபூர்வமான தகவல்!
ReplyDeleteத ம 5
ஆதிவாசிகளின் இசைக்கருவி. இதை இன்றும் அவர்கள் புழங்குகிறார்கள் என்பது மகிழ்வும் வியப்பும் தரக்கூடிய செய்தி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்குமார்.
Deleteபுதிய தகவலை படத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றிங்க தோழி.
ReplyDeleteஇசைக்கருவியை பார்க்க அழகாக இருக்கிறது.
இன்றும் இலைதழைகளை உடுத்திக்கொண்டிருக்கும் ஆதிவாசிகளின் கைவண்ணம் உண்மையில் வியக்கவைக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
Deleteபுது தகவல். இசைக்கருவியை இசைக்கக் கேட்டிருக்கிறீர்களா. ?
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. இதன் இசையை யூட்யூபில் கேட்டிருக்கிறேன். . பாரம்பரியம் காக்கும் பழங்குடி மக்களின் வாழ்வியலும் இசையும் நடனமும் பார்க்க விரும்பினால் இங்கே சென்று பார்க்கலாம்.
Deletehttps://www.youtube.com/watch?v=YaH_ifiFl_A
பயனுள்ள இதுவரை அறிந்திராத தகவல் கீதா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteவாத்தியங்களைப் பற்றிய ஒரு தொடர்பதிவு தொடங்குங்களேன் கீதா? நாம் அறிந்திராத எத்தனை எத்தனை இசைக்கருவிகள்....மக்கள், வாழிடம், பண்பாடு சார்ந்து... சிந்தனை, கற்பனை,பயன்பாடு கொண்டவையாக....
நம்மிடம் இருந்து மறைந்து கொண்டிருக்கிறவை எத்தனை... ஜலதரங்கம் என ஒரு இசைக்கருவி...
பின்னர் விக்கிபீடியாவில் அவற்றை இணைத்துக் கொள்ளலாம். பயனுடயதாய் இருக்கும்.
வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி மணிமேகலா. வாத்திய அறிவெல்லாம் எனக்குக் கிடையாதுப்பா.. இந்த இசைக்கருவியைப் பற்றி அறிந்துகொண்டபோது அதை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளும் உற்சாகம்தான் எழுதத் தூண்டியது. இசைஞானம் உள்ளவர்கள் எழுதினால்தான் சிறப்பாக இருக்கும் மணிமேகலா.
Deleteஅரியதோர் இசைக்கருவி. தகவல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி வெங்கட்.
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
வருகைக்கும் கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி ஐயா.
Deleteவித்தியாசமான இசைக்கருவி.....
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அனுராதா ப்ரேம்.
Delete