28 August 2015

ஊதா உடையணி தினம்





அவனாகவோ… அவளாகவோ….
அவளுமவனுமாகவோ…
அவனுள் அவளாகவோ…
அவளுள் அவனாகவோ…
அவனோடு அவளாகவோ…
அவளோடு அவனாகவோ...
அவனோடு அவனாகவோ..
அவளோடு அவளாகவோ…
எவரோடும் எவராகவோ…
எவரையும் நாடா எவருமாகவோ…
நீ நீயாயிருப்பதன் பெருமை உனது.
அப்பெருமைக்கான உரிமையும் உனது.

****

பாலின ஈர்ப்பு மற்றும் பாகுபாடுகளை முன்னிறுத்தி சகமனிதரை எடைபோடும் மனோபாவத்தை மாற்றும் விழிப்புணர்வு நோக்கோடு ஆஸியில் கொண்டாடப்படும் தினம் – ஊதா உடையணி தினம் (wear it purple day). 2010 ஆம் ஆண்டு இரு ஆஸ்திரேலிய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இத்தினம் இன்று உலகளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



தனிமனித உரிமையின்மீதான நம்பிக்கை உடைய அனைவரும் இன்று ஊதா நிற உடையுடுத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். ஊதா வண்ண உடையில்லாதவர்கள் ஊதா நிற கைவளையங்களையும் ஊதா நிற ரிப்பன்களையும் அணிகிறார்கள். இன்று ஏராளமான ஊதா கலர் ரிப்பன்களைப் பார்க்கமுடியும். ஆனால் யாரையும் பாட்டுப்பாடி கேலி செய்யமுடியாது. ஏனெனில் இந்தக் கொண்டாட்டத்தில் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையும் பிரத்தியேக ஊதா நிற சீருடையுடன் உற்சாகமாய்க் களமிறங்கியுள்ளது.





சர்வதேச ஊதா தினத்தோடு இத்தினத்தைக் குழப்பிக்கொள்ளவேண்டாம். world purple day என்பது வலிப்புநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக வருடந்தோறும் மார்ச் 26-ஆம் நாள் உலகளவில் அனுசரிக்கப்படும் ஒரு தினமாகும். அன்றும் ஊதா நிற உடையணிய ஊக்குவிக்கப்படுகிறது. 





Today is Wear it purple day (August 28)
The message is ‘You have the right to be proud of who you are.’
*****
(படங்கள் உதவி: இணையம்)

32 comments:

  1. இதுவரை அறியாத செய்தி
    படங்களுடன் பகிரப்பட்டால் இன்னும்
    சிறப்பாக இருக்கும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார். உங்கள் பரிந்துரைப்படி இப்போது சில படங்களை இணைத்துள்ளேன். மிகவும் நன்றி சார்.

      Delete
  2. புதிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
    அதனால்தான் தங்களது தளமும், ஊதா கலரில் ரிப்பன் கட்டி விட்டு இருக்கின்றீர்களோ....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றிங்க கில்லர்ஜி. சில வருடங்களாகவே இங்கு ஊதா ரிப்பன் பறந்துகொண்டிருக்கிறதே.. :))

      Delete
  3. புதிய தகவல் ரமணி ஐயா சொல்வது போல படங்களுடன் பகிர்ந்தால்இன்னும் சிறப்பாக இருக்கும் தோழி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசி. ரமணி ஐயாவின் பரிந்துரைப்படி இப்போது சில படங்கள் இணைக்கப்பட்டுவிட்டன.

      Delete
  4. ஊதாநிற உடை! அறியாத புதிய செய்தி !நலமா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நான் நலம். தங்கள் நலமறிய ஆவல்.

      Delete
  5. தெரியாத தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ, எனக்கு மிகவும் பிடித்த கலர்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஊதா நிறம் உங்களுக்குப் பிடித்த நிறம் என்றறிய மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  6. அறியா செய்தி
    தங்களால் அறிந்தோம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. நல்லதுதானே! அனைவரும் சமமாக ஒரே வண்ணத்தில்!
    வாழ்த்துகள்!

    த ம.5

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இளமதி. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  8. இதுவரை தெரியாத செய்தி! அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  9. நீ நீயாயிருப்பதன் பெருமை உனது.
    அப்பெருமைக்கான உரிமையும் உனது.//

    அருமை தோழி! புதுப்புது செய்திகள் அறியத் தருவதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமகள்.

      Delete
  10. ஆகா! அறியாத தகவல்! அருமையான தகவல்! பகிர்விற்கு நன்றி கீதமஞ்சரி!
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கிரேஸ்.

      Delete
  11. அறியாத தகவலை தெரிந்து கொண்டேன்! புகைப்ப‌டங்களூம் அழகு! அர்த்தம் அதையும் விட அழகு கீதமஞ்சரி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மனோ மேடம்.

      Delete
  12. இரண்டு ஊதா நாள்களை இன்று அறிந்தேன் . மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  13. அறியாத செய்தி... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  14. ஊதா! ஊதா! ஊதா!..
    கண் நிறைந்த ஊதா!..
    மனம் வியாபித்த ஊதா!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார். தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி சார்.

      Delete
  15. அறியாத செய்தி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி தோழி ... மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இனியா.

      Delete
  16. அறியாத செய்திகள்! படங்களும் சிறப்பு! பகிர்வுக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.