6 October 2014

கங்காரு பாத மலர்கள் (kangaroo paws)



கட்டுக்குள் அடக்கப்பட்ட கங்காரு பாதமலர் செடி


பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு ரோமத்துடன் கங்காருவின் விரிந்த பாதவிரல்களைப் போன்று இருப்பதால் கங்காரு பாதங்கள் (Kangaroo paws) என்றே குறிப்பிடப் படுகின்றன.

கங்காரு பாதமலர்கள் (kangaroo paws)

 ஆஸ்திரேலியத் தாவரமான இவற்றின் பூக்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

கங்காரு பாதமலர் மொட்டுகள்

தாவரவியல் பெயரான Anigozanthos என்பதற்கு 
ஒழுங்கற்றப் பூக்கள் என்று பெயராம்.

கங்காரு பாதமலர் மொட்டுகள்

இவ்வினத்தில் உள்ள ஏராள வகையில் எங்கள் வீட்டில் வளர்ந்தவை yellow mist மற்றும் bush lantern வகை பூக்கள். 

 கங்காரு பாதமலர் பூங்கிளை

  கொத்துக்கொத்தாய் மலர்ந்து நிற்கும் அவற்றில் தேன்குடிக்க எங்கிருந்தோ பறவைகள் தேடிவரும். இவற்றுள் பச்சையும் சிவப்பும் கலந்த வகைப்பூக்கள் மேற்காஸ்திரேலிய மாநிலத்தின் மாநிலப்பூக்களாகும். 

5 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் மேடம். தாமதமானாலும் என் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

      Delete
  2. நலம் தானே கீதா மேடம்! அழகான புகைப் படங்கள். கங்காருவின் பாதங்களில் சில வகைகள் கூட உண்டல்லவா?

    ReplyDelete
    Replies
    1. நலமே மோகன்ஜி. பல மாதங்களுக்குப் பின்னர் உங்களை மீண்டும் பதிவுலகில் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. கங்காரு பாத மலர்களில் பலவகை உண்டு. இது எங்கள் வீட்டில் வளர்ந்த இனம் மட்டுமே.

      Delete
  3. அருமையான மலர்கள்..!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.