நண்பர் இரவீ அவர்கள் சமீபத்தில் ஆனைமலை புலிகள் சரணாலயத்திற்கு சென்றிருந்தபோது, தான் கண்ட காட்சியைப் புகைப்படமாகப் பதிவு செய்து முகநூலில் பதித்திருந்தார். கருவுற்ற பெண் குரங்கை ஆண் குரங்கு பரிவுடன் பார்த்துக்கொள்ளும் காட்சி அது. அந்தப்படத்துக்கான என் வரிகளும் படமும் கீழே....
வம்சம் தழைக்க
வாரிசு சுமக்கும்
வானரக்கண்ணே…
என் காதல்பெண்ணே…
இம்சைகளென்று எண்ணிவிடாதே…
இனியவளே என் பணிவிடைகளை!
ஓடும் கால்களை
ஒய்யாரமாய் நீட்டிடு
நீவிக்கொடுத்து
என் நேசம் காட்டுவேன்.
தள்ளிய வயிற்றையும்
தடவிட அனுமதி
உள்ளிருக்கும்
என் செல்லத்துக்கு
உன்மத்தமிகு நன்முத்தங்கள்
பதிப்பேன்.
இலையான் கொசுக்கள்
அண்டாது
இலையால் விசிறிப்
பார்த்திருப்பேன்.
பசியென்று நீ உணருமுன்னே
புசியென்று நான்
பலவும் தருவேன்.
இழையோடும் நம்
காதல் பெயரால்
இன்னுஞ்செய்யக்
காத்திருக்கிறேன்
மழையும் குளிரும்
வாட்டுமுன்னே
மகன் பிறந்திடுவானோ
சொல்லடி என் கண்ணே!
வம்சம் சுமக்கும் வானரக் கண்மணிகளின்
ReplyDeleteவனப்பான வரிகள் அருமை.பாராட்டுக்கள்.!
நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
Delete'கவி'க் காதல்!
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteவானரத்தின் சீர்ப்பரிவு மாண்புதனைக் காட்டினை
ReplyDeleteஆனவரம் மாந்தருக்கு அன்று!
காட்சியும் கவிதையும் மிக அருமை கீதமஞ்சரி!
வாழ்த்துக்கள்!
நன்றி இளமதி.
Deleteதங்கள் வரிகளில் பாசம் அப்படியே இழையோடி இன்பமளிப்பதாக உள்ளது. மிகவும் ரஸித்தேன். மிகவும் அதிர்ஷ்டக்காரிதான் ... அந்தப்பெண் குரங்கு. :)
ReplyDeleteகர்ப்பிணியான அனுவைப் படுத்தி எடுத்த மனோ ஞாபகமும் வந்தது ! :)))))
பிரியமுள்ள கோபு
அனுவைப் படுத்திய மனோவை இங்கு ஒப்பிட்டது நல்ல ரசனை. நன்றி கோபு சார்.
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நன்றி ஐயா.
Deleteதாய்மை உணர்வோடு எழுதப்பட்ட பாசவரிகள்.
ReplyDeleteத.ம.3
நன்றி ஐயா.
Deleteகவி வரிகள்அருமை சகோதரியாரே
ReplyDeleteகருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.
Deleteதம 4
ReplyDeleteபுகைப்படம் ஒரு கவிதை...அதற்கு பொருத்தமாய் இன்னொரு கவிதை! அருமை!!
ReplyDeleteநன்றி மகி.
Deleteஇந்தப் பரிவு பல ஆண்களுக்கு இல்லையே என்னும் வேதனை தலைக் காட்டுகிறது. படத்துக்கான கற்பனைக் கவிதை அழகு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஅவற்றுக்கு இருக்கும் பாசம் அதிகம், நம்மில் சுயம் அதிகம் விளையாடுவதால் பாசம் சொற்பமே எஞ்சி நிற்கிறது... கவிதை நலம்
ReplyDeleteநன்றி தினேஷ்குமார்.
Deleteவாரிசைச் சுமக்கும் தன் துணையின் மீது கொண்ட அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் புகைப்படம் வெகு அழகு! பொருத்தமான கவிதை அழகுக்கு அழகு சேர்க்கிறது! பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteநன்றி அக்கா.
Deleteபடத்திற்கேற்றவரிகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteகவிதை அருமை! இரசித்தேன்! நன்றி!
ReplyDeleteநன்றிங்க சேஷாத்ரி.
Deleteபுகைப்படம் அழகு. அதற்கு தாங்கள் எழுதிய கவிதை மிக அழகு.....
ReplyDeleteபாராட்டுகள்.
நன்றி வெங்கட்.
Deleteவானரக் கவிதை வானை தொடுகிறது....நன்றிகள்
ReplyDeleteநன்றிங்க புத்தன்.
Deleteகீதமஞ்சரி! மனம் லயிக்கும் புகைப்படம்.
ReplyDeleteபுண்ணியம் செய்த குரங்கு புனல்தமிழ் கவிதை கொண்டது.
மிகவும் ரசித்தேன்... (இன உணர்வு உண்டல்லவா!)
இன உணர்வுதான் என்னையும் எழுதவைத்திருக்கிறது என்று நம்புகிறேன். நன்றி மோகன்ஜி.
Deleteஒவ்வொரு வரிகளிலும் பாசம் பொங்குகிறது...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.
Deleteமழையும் குளிரும் வாட்டுமுன்னே
ReplyDeleteமகன் பிறந்திடுவானோ சொல்லடி என் கண்ணே!......
மனம் நிறைந்த கவிதை....
நன்று...நன்று...கீதா....
வேதா. இலங்காதிலகம்.
வாநரன்கள் கொள்ளை அழகு!
ReplyDeleteகணவருக்கு என்ன கரிசனம் பாருங்க!!!!