நம்மூர் டிசம்பர் பூக்களைப் பார்த்தாற்போன்ற பிரமை. வெளிர் மற்றும் அடர் ஊதா நிறங்களில் பூங்காவில் பார்க்குமிடமெல்லாம் சரம் சரமாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன இந்த விஸ்டரியா (Wisteria) பூக்கள்! கொடிவகையைச் சார்ந்த இத்தாவரத்தின் தாயகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளாம். எது கிடைத்தாலும் பற்றிக்கொண்டு மளமளவென்று ஏறிவிடும் இயல்புடைய இது இருபது மீட்டர் உயரம் கூட ஏறிவிடுமாம். உலகத்திலேயே மிகவும் பெரிய விஸ்டரியா கொடி கலிஃபோர்னியாவில் Sierra Madre என்ற ஊரில் உள்ளது. 1894 இல் நடப்பட்ட அது இப்போது கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் 250 டன் எடையில் பரவிக்கிடக்கிறதாம். மலர்கள் நறுமணம் பரப்பினாலும் விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை.
விஸ்டரியா பூங்கா (wisteria garden) |
விஸ்டெரியா பூக்கள் (wisteria) |
சரவிளக்குப்போல் தொங்கும் விஸ்டரியா மலர்ச்சரம் |
விஸ்டரியா பூக்கள் |
ஆற்றோரம் படர்ந்து நிற்கும் விஸ்டரியா கொடிமலர் அழகு. |
விஸ்டெரியா மலர்ச்சரம் |
இலை மூடிய கிளை மூடிய விஸ்டரியா மலர் அழகு. |
விஸ்டரியா மலர்ப்பந்தல் |
பற்றுச்செடியை பார்வையினின்று மறைத்திருக்கும் விஸ்டரியா மலர்க்கொடி |
முரண்வண்ணங்கள் |
பதிவின் மலர்கள் வசீகரித்தன .பாராட்டுக்கள்..
ReplyDeletehttp://jaghamani.blogspot.com/2013/06/blog-post_2.html
பூ மரங்கள் வீசும் சாமரங்கள்
என்று பதிவிட்டிருக்கிறேன்..!