கீதா மதிவாணன் என்னும் நான் கீதமஞ்சரி என்ற பெயரில் பதிவுலகில் அடியெடுத்துவைத்து மூன்றரை வருடங்களாகின்றன. சராசரியாக வாரமொரு பதிவு என்ற கணக்கில்
இதுவரை 199 பதிவுகள் இட்டுள்ளேன். என்னுடைய இருநூறாவது பதிவை வலைச்சரத்தில் இடுவதை
பெருமையாகக் கருதுகிறேன். இதற்கு முன் இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பணியில் இருந்துள்ளேன்
என்பதால் என்னைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.
முதன்முதலில்
என்னை வலைச்சர ஆசிரியராகப் பரிந்துரை செய்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும்
நியமித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் பணிவான நன்றியும் வணக்கமும்.
இதுவரை எழுதி என்ன சாதித்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதிவுலகில் பல நல்ல நட்புகளைப்
பெற்றிருக்கிறேன். சிறப்பான பதிவர்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை
முன்வைத்து என் எழுத்துத் திறனை மேம்படுத்தும் ஆர்வத்தை வளர்த்திருக்கிறேன். போட்டிகளில்
கலந்துகொண்டு பரிசுகள் விருதுகள் பெற்று எனக்கென ஒரு இடத்தை உங்கள் அனைவர் மனத்திலும்
தக்கவைத்திருக்கிறேன். இவற்றோடு, நானறிந்தவரை எந்த வகையிலும் பிறர் மனம் புண்படாதவகையிலும்,
என் மனத்துக்கு நிறைவு உண்டாகும் வகையிலும் வாசகர் எதிர்பார்ப்பை ஓரளவேனும் ஈடுசெய்யும்
வகையிலும் எழுதியுள்ளேன், எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
இதுவரை பல கவிதைகள்,
சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்பு கதைகள்,
பல்சுவைப் பதிவுகள் என கலந்துகட்டி எழுதியிருந்தாலும் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை
என்னுடைய கட்டுரைகளே என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஆஸ்திரேலிய உயிரினங்கள்
பற்றிய கட்டுரைகள் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன.
இந்த
வாரம் முழுவதும் என்னோடு பயணிக்க உள்ள உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று மகிழ்கிறேன்.
என்னால் இயன்றவரை பல நல்ல படைப்பாளிகளை அறிமுகப்படுத்த விழைகிறேன். புதியவர்களுக்குப்
பழகியவர்களையும் பழகியவர்களுக்குப் புதியவர்களையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி தமிழ்ப்
பதிவுகளின் தரத்தையும் பெருமையையும் அடுத்த படிக்கு உயர்த்தும் வலைச்சரத்தின் நன்னோக்கத்துக்கு நம்மாலான
பங்கினை ஆற்றுவோம். வாருங்கள். நன்றி.
இரண்டாம் நாள்
தம்பொருள் என்ப தம் மக்கள்
மூன்றாம் நாள்
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!
படம்: நன்றி இணையம் |
ஐந்தாம் நாள்
தமிழன் என்றோர் இனமுண்டு
படம்: நன்றி இணையம் |
இனிய வணக்கம் சகோதரி....
ReplyDeleteஎத்தனை முறை ஆசிரியர் பொறுப்பு கொடுத்தாலும் தகும்
உங்களின் திறமைக்கு.
வலைச்சர ஆசிரியர் பணிக்கும் .. இருநூறாவது பதிவுக்கும்
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றி மகேந்திரன்.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
தகவலை பார்த்தவுடன் மகிழ்ச்சிதான்... மேலும் தங்களின் திறமை வளரட்டும் 200வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Deleteமூன்றாவது முறையும் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்பது நிச்சயம். நல்வாழ்த்துகள் கீதா.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி.
Deleteதங்களின் வெற்றிகரமான இந்த 200வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். மேலும் வெற்றி மேல் வெற்றி கிடைத்திட என் நல்லாசிகள்.
ReplyDeleteநன்றி கோபு சார்.
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteயாவும் சிறப்பாக அமைய நல் வாழ்த்துக்கள் கீதமஞ்சரி!
ReplyDeleteநன்றி இளமதி.
Deleteசெய்யும் பணியில் முழு ஈடுபாடு கொண்டவர் நீங்கள். வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்காக வேண்டியாவது பல புதிய தளங்களுக்கு விஜயம் செய்வீர்கள் என்று தெரியும் . கடந்த முறை உங்கள் பணி மிகச் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள். .
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteவாழ்த்துகள் அக்கா
ReplyDeleteநன்றி குட்டன்.
Deleteவாழ்த்துக்கள் கீத மஞ்சரி அக்கா.
ReplyDeleteநன்றி அருணா செல்வம்.
Deleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteநன்றி நிலாமகள்.
Deleteமனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமூன்றாம் முறையும் மிகச் சிறப்பான பணி தொடர்கிறது.
நன்றி வெங்கட்.
Deleteவாழ்த்துக்கள்>
ReplyDeleteஎனக்கு தமிழில் ரைப் பண்ணா கச்டமாக இருப்பதால் அடக்கி வாசிக்கிறேஎன்ன்.. ஏதோ கோளாரூ..
ஓ.. அப்படியா? விரைவிலேயே கணினிக் கோளாறு சரியாக வேண்டிக் கொள்கிறேன். நன்றி அதிரா.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
நன்றி ஐயா.
Deleteஇருநூறாவது பதிவுக்கும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி கௌரி
Delete200 தடவை பதிவுகள் இட்டு சாதனை புரிந்தமைக்கு என் வாழ்த்துகள்.
ReplyDelete