12 January 2014

கற்பூரம்



            


நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது, அந்தப் பிரேதம். அதன் உறவுகள் யாவும் அது, அவளாய் இருந்தகாலத்து அருமை பெருமைகளைச் சொல்லி வாய் ஓயாமல் அழுதுகொண்டிருந்தன. அதன் அருகில் கண்ணீர் விட்டபடி அதன் இரு மகள்களும், அவர்களை அணைத்தபடி அதன் தாயும். இந்த இரண்டு தலைமுறைகளின் இணைப்புப்பாலமான அவள் மட்டும் இன்று ஆவியாய்! ஆம்! ஆவியாய்தான்!

நிறைவேறாத ஆசைகளுடன் அல்பாயுசில் இறந்துவிடுபவர்களின் ஆவி அது நிறைவேறும்வரை நிம்மதியற்று அலைந்துகொண்டிருக்குமாமே! அவளும் அலைகிறாள் அப்படி!

நேற்றுவரை நன்றாக இருந்தவள், காலையில் எழுந்து, வாசல் தெளித்து, கோலமிடவந்தபோது, கால் வழுக்கி, தடாரென்று நிலைப்படியில் மண்டை மோதி விழுந்தவள், விழுந்தவள்தான். அதன்பின் எழவேயில்லை.

சாவு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள் அவள். பல்லக்குப் பாடை தயாராகிக்கொண்டிருக்கிறது. உறவுகள் ஒருவர் விடாது அனைவரும் வந்திருந்தனர். அனைவரையும் பார்க்க அலாதி ஆனந்தமாய் இருந்தது. பெரியவள் திருமணத்தின்போதுதான் எல்லோரையும் பார்க்கமுடியும் என்று நினைத்திருந்தாள். அப்போது கூட இத்தனைப் பேரும் வந்திருப்பார்களா என்பது சந்தேகமே..

கொல்லைப்புறம் மூன்றாவது வீட்டில் அப்பா மேற்பார்வையில் இழவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் டிபன் காஃபி, குழந்தைகளுக்குப் பால் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடங்கலின்றி நடந்துகொண்டிருக்கிறது. அவளுக்கு திருப்தியாக இருந்தது.

அழுது ஓய்ந்து அமர்ந்திருக்கும் மகள்களைப் பார்த்தாள். அவர்களைப் பற்றிய கவலை அவளுக்குத் துளியும் இல்லை. அம்மா இருவரையும் பார்த்துக்கொள்வாள். நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்துவிடுவாள்.  போதுமென்ற அளவுக்குப் பொருளாதாரம் உள்ளது. கல்லூரியை முடித்தவுடன் கல்யாணம் செய்துவிடலாம். இப்போதைக்கு விடுதியில் தங்கிப் படிப்பதால் இவளுடைய தேவையும் தேவையில்லை. 

எல்லாம் சரியாக இருப்பதுபோல் தோன்றினாலும் ஏதோவொரு நெருடியது.  அ.. அவன் எங்கே? சுமங்கலியாய் பூவோடும் பொட்டோடும் போயிருக்கிறாளே அந்தப் பெருமையை அள்ளித்தந்த அந்த அருமைக் கணவன் எங்கே?

கூட்டத்துக்குள் புகுந்து திணறி வெளியில் வந்தாள். இதோ, வாசற்புறப்பந்தலில், நாற்காலியில் அமர்ந்தபடி...எ...என்ன...என்ன செய்துகொண்டிருக்கிறான்?

அடப்பாவி! செய்தித்தாள் படிக்கிற நேரமா இது? இருபது வருடங்களாய், உன்னுடன் வாழ்ந்து, உனக்காகவே வாழ்ந்து, பொட்டென்று போய்ச்சேர்ந்தவளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்...எப்படி இவனால் இருக்கமுடிகிறது?
ஆமாம்! அவள் உயிருடன் இருந்தபோது மட்டும் என்ன அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிக்கொண்டா இருந்தான்? அவள் விசனத்துடன் நொடித்துக்கொண்டாள்.

எத்தனைக் கல்யாணக்கனவுகளோடு அவன் கரம்பற்றினாள். அவளாகவா பற்றினாள்சுற்றி நின்ற தோழிகள் கேலியுடன் பற்றச்செய்தனர்.  எத்தனை சினிமா பார்த்திருக்கிறாள். அச்சமும், நாணமும் பின்னிப் பிணைந்து அவளைப் பாடாய்ப் படுத்தினாலும், தோழியர் தந்த உற்சாகத்தில், கரம்பற்றத் துணிந்தவேளை, அவளை மட்டுமல்ல; அனைவரையுமே அதிர்ச்சியில் உறையச்செய்தன, அவன் வார்த்தைகள்.

"என்ன விளையாட்டு இது? எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கலை"

சட்டென அங்கு நிலவிய அமைதி அவளைச் சங்கடப்படுத்தியது. சுற்றத்தின் பரிதாபப் பார்வைகளும் அவளைக் கூர்வாளாய்க் குடைந்தன.

புஸ்ஸென்று காற்றுப்போன பலூனாய் ஆனது, அவளது கல்யாணக்கனவு! சுய ஏமாற்றத்தைவிடவும், அத்தனைப் பேர் மத்தியில் சொன்னதுதான் ஆழமான காயத்தை அவள் அடிமனதில் உண்டாக்கியது. அதுதான் முதல் காயம்!

விருந்துண்ணும்போது யாரோ சொன்னார்கள், "மாப்பிள்ளை! நீங்க பொண்ணுக்கு ஊட்டுங்க, பொண்ணு  உங்களுக்கு ஊட்டட்டும்"

வீடியோ எடுப்பவர் தயாராக நிற்க, அவன் சொன்னான், "இதென்ன பழக்கம்? ஒருத்தர் இலையிலிருந்து இன்னொருத்தருக்கு ஊட்டிகிட்டு? அதெல்லாம் வேண்டாம்!"

வீடியோ அணைக்கப்பட்டது.  இது இரண்டாவது.  முத்தாய்ப்பாய் முதலிரவின் கனவுகளை முறியடித்தான், அவளுக்கு முழு சுதந்திரம் தருவதாய் நினைத்து. அதன்பின் தொடர்ந்து எண்ணற்ற காயங்கள். புதிதாய்க் கொத்தின அம்மிபோல் அத்தனை வடுக்களைச் சுமந்து சுமந்து சோர்ந்து போயிருந்தது, மனம்.

ஒருவேளை இஷ்டமில்லாமல் திருமணம் செய்துகொண்டானோ?. அதுவும் இல்லையாம். இஷ்டப்பட்டுதான் திருமணமாம். இதற்குமுன் எவரையும் காதலித்ததும் இல்லையாம். இதுவரை போகட்டும். இப்போதுதான் ஒருத்தி அதற்காகவே வந்துவிட்டாளே.. உரிமையுடன் காதலிக்கலாமேஅதுதான் இல்லை. உணர்த்தத் தலைப்பட்ட இவள் காதலும் அலட்சியப்படுத்தப்பட்டது. காதல் என்ற உணர்வே அவன் அணுக்களில் இல்லை என்னும் அளவுக்கு கருங்கல்லாக இருந்தான். ஆனால் என்ன குறை வைத்தான் அவளுக்கு!


அவனொரு யதார்த்தவாதியாய்த் தன்னைக் காட்டிக்கொண்டான். வாழ்வியல் நுட்பம் அறிந்தவனாயிருந்தான். இருந்தால் அனுபவிக்கணும்; இல்லை என்றால் அதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. இதுதான் அவன் கொள்கை. இது பொருட்களோடு நின்றிருந்தால் பிரச்சனையில்லை. பெண்டாட்டிக்கும் அல்லவா பொதுவாகிவிட்டது. நீயில்லாத வாழ்வை என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது!" என்பது போன்ற வசனங்களை அவனிடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தாள்.

குடும்பம் நடத்துவதும் அலுவலகத்தில் பணியாற்றுவதும் இரண்டும் இரண்டு கடமைகள் என்று நினைப்பவனிடம் காதலை எதிர்பார்ப்பது அவள் தவறுதானே…  கண்ணே மணியே என்று காதல்மொழி பேசி பிதற்றவேண்டாம்அன்பாய் ஆதரவாய் ஒரு புன்னகை போதுமேசிறு குறும்புப் பேச்சுசின்னச் சின்ன சில்மிஷங்கள்…. ம்ஹூம்எப்போதும் உணர்ச்சியற்ற அந்த முகத்தின் மூலம் அவன் உள்ளாடும் உணர்வுகளை உணரமுடியாமல் இவளுக்கும் பல நேரம் கல்லாகிப்போனது மனம்.

அவன் வார்த்தைகளில் சொல்வதானால் இவள் ஒரு சுதந்திரப் பறவை.  இவள் வார்த்தைகளில் சொல்வதானால் அவன் ஒரு விட்டேத்தி.

உள்ளுக்குள் அரிக்கும் வேதனையை அம்மாவிடம் சொல்லஅவளை அதிசயமாய் பார்த்தாள்.

உளறாதேடிஉனக்கென்ன குறை? உன்புருஷன்தான் என்ன குறை வச்சார்? உன்னை இங்க விட்டுட்டுப் போகும்போது என்ன சொன்னார்உன் இஷ்டம் போல எத்தனை நாள்வேணும்னாலும் தங்கிட்டு வான்னாரேஅது எத்தனைப் புருஷன்மார் வாயிலிருந்து வரும்? தங்கம்டீ அவர்! நான்தான் பார்த்தேனேபிறந்தநாள், கல்யாண நாள் எல்லாத்தையும் எவ்வளவு சரியா நினைவு வச்சிருந்து புடவை நகைன்னு வாங்கித்தரார்உனக்கு தலைவலின்னால் கூட உடனே டாக்டரிடம் அழைச்சிட்டு ஓடறார்..இதை விடவுமா நல்ல புருஷன் கிடைச்சிடப்போகிறான் ஒரு பொண்ணுக்கு போடி பைத்தியம்கிடைச்சதை அனுபவிக்கத் தெரியாத மண்டு”  என்று ஆத்துப்போனாள்..

அவளுக்கு எப்படி புரியவைப்பது? தான் எதிர்பார்ப்பது அவனிடம் புடவையோ நகையோ அல்ல, அன்பாய் ஆசையாய் ஒரு முத்தம் போதும்... தலைவலி என்றால் டாக்டர் எதற்கு? கொஞ்சம் அமிர்தாஞ்சன் கொஞ்சம் கரிசனம் போதுமே

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட அன்று மாலை வரை பொறுமையில்லாமல் உடனே அவன்  அலுவலகத்துக்கு தொலைபேசினாள். ஆசையும் வெட்கமுமாய் திக்கித் திணறி ஒருவழியாய் விஷயத்தை சொல்லிமுடிக்க, அவன் கேட்டான்.

"அப்படியா? சரி, இதைச் சொல்லவா வேலை நேரத்தில் கூப்பிட்டே?"

அவள் அதிர்ந்துபோனாள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதுபோல் என்ன பதில் இது? இதைவிடவும் முக்கியமான விஷயம் என்றால் எதை எதிர்பார்க்கிறான். அவனைப் பொறுத்தவரை எதுவுமே முக்கியச் செய்தியில்லை என்று போகப்போகத்தான் புரிந்தது. இதோ இன்று தன் மரணம் கூட எத்தனை இயல்பாய் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது அவனால்! அவள் பழைய நினைவுகளால் புழுங்கிக்கொண்டிருந்தாள்.

எத்தனைப்பேர் குழந்தைப்பேறு இல்லாமல் கோயில் கோயிலாய் அலைகிறார்கள்? கோடி கோடியாய் மருத்துவத்துக்கு செலவழிக்கிறார்கள்? அப்படியும் எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறதா, அந்தப் பாக்கியம்? இப்படி எந்தத் தொல்லையும் தராமல், இயல்பாய்த் தரித்ததற்காக எத்தனை சந்தோஷப்படவேண்டும்? வம்சம் தழைக்க துளிர் விட்ட வயிற்றை தன் அன்புவார்த்தைகளால் நீவி ஆனந்திக்கவேண்டாமா? குதூகலப்பகிர்வால் அவளை குஷிப்படுத்த வேண்டாமா? அவளது பரவசத்துள்ளலைப் பகிர்ந்திருக்கவேண்டாமா?

என்ன பிறவி இவன்?

பிரசவம் பற்றிய பயத்தைப் பகிரும்போதெல்லாம் என்ன சொன்னான்?

"என்ன, நீ? இப்படி பயப்படுறே?ஆடு, மாடு எல்லாம் தானாதான் குட்டி ஈணுது. அதுக்கெல்லாம் யாரு பிரசவம் பாக்குறா? அதுங்களுக்கெல்லாம் ஸ்கேன் உண்டா, மாசாமாசம் செக்கப் உண்டா? இருந்தாலும் அதது இயல்பா நடக்குதில்லே? என்னமோ நீ மட்டும்தான் அதிசயமா பெறப்போறவ மாதிரி கவலைப்படுறே! மருத்துவம் முன்னேறின இந்தக்காலத்திலே தேவையில்லாத பயம் எதுக்கு?"

ஆறுதலாய்தான் சொன்னான். ஆனாலும் தன்னை ஒரு ஆட்டுடனும், மாட்டுடனும் ஒப்பிட்ட அவனை அவளால் மன்னிக்கவே இயலவில்லை. தன் மனைவி தாயாகப்போகிறாள்  என்கிற அதீத கர்வத்தோடும் அக்கறையோடும், அவள் தலைகோதி,"கவலைப்படாதேம்மா! நான் உன்கூடவே இருக்கிறேன்!" என்றொரு வார்த்தை சொல்லியிருந்தால் எவ்வளவு தைரியமாக இருந்திருக்கும்? இப்படி அநியாயத்துக்கு பயமும், படபடப்பும் அதிகரித்து பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு கொண்டுபோய் விட்டிருக்குமா?

போகட்டும் தன் விஷயத்தில்தான் இப்படி.. பிள்ளைகள் விஷயத்திலாவது தன் உள்ளார்ந்த உணர்வுகளைக் காட்டியிருக்கிறானா? மூத்தவள் பூப்பெய்திய நாளன்று அவனைத் தனியே அழைத்து சேதி சொன்னபோதும், தலைகால் புரியாமல் பரபரப்புடன் வளையவந்தபோதும், அக்கம்பக்கத்தை, உறவுகளை அழைத்து சடங்கு, சம்பிரதாயங்கள் செய்தபோதும் இப்படித்தான்! சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை.'இயல்பாய் நடக்கிற விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?' என்றொரு அலட்சியப்போக்குதான் இருந்தது.

என்னதான் தந்தை என்ற முறையில் பொறுப்பாய் பாடம் சொல்லிக்கொடுத்தாலும், அறிவு வளர ஆயிரம் உபகரணங்கள் வாங்கித் தந்தாலும், ஊர் ஊராய் உல்லாசப்பயணம் அழைத்துச் சென்றாலும் இதுபோன்ற ஒரு தருணத்தில், மகளின் அருகில் அமர்ந்து, "அம்மா! நீ வளர்ந்திட்டாயா? என்னால் நம்பவே முடியலையே! நேற்றுதான் பிறந்தமாதிரி இருக்கு!" என்று ஆதங்கத்துடன், ஆதுரத்துடன் அவள் கன்னம் வழித்துச் சொன்னால் எத்தனைச் சந்தோஷம் வரும் அந்தச் சின்னப்பெண்ணுக்கு?

சரி, அவனுக்குதான் தெரியவில்லை, அவளாவது எடுத்துச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றும்ஆனால் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையிலா அவன் இருந்தான்? தான் நினைப்பதே சரி; தான் சொல்வதே நியாயம் என்று திடமாய் நம்புபவனிடம் எதைச் சொல்லி புரியவைப்பது? ஆனாலும் என்ன குறை வைத்தான் குடும்பத்துக்கு?

சொந்த வீட்டுக்கு அதிபதி! சொகுசுக்கார் வாசலில்! அவள் பீரோ, பட்டுப்புடவைகளாலும், தங்க நகைகளாலும் நிரம்பி வழிகிறது. இரண்டு பெண்களுக்கும் சீர் செய்யப் போதுமான செல்வம் சேர்த்தாகிவிட்டது. எல்லாம் யாரால்? அவனது கடின உழைப்புதானே காரணம்? மாங்கு மாங்கென்று உழைத்ததுதானே இத்தனை வசதிக்கும் அடிப்படை?

இத்தனை செய்திருக்கிறானேஇன்னும் அவனைக் குறைப்பட்டுக்கொண்டிருப்பதில் என்ன லாபம் என்று தோன்றினாலும் ஏன் குறைபடக்கூடாது என்பதற்கும் காரணங்களை வைத்திருந்தாள் அவள்.

எல்லாவற்றையும் விட்டுவிடுவோம்!  உயிரோடு இருந்தபோதுதான் அவள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. இப்போது பிணமாய்க் கிடக்கிறாளேஅந்தப் பிணத்துக்குரிய மரியாதையைக் கொடுக்கிறானா அவன்? மரியாதை வேண்டாம்அவமரியாதையாவது செய்யாமல் இருக்கவேண்டாமா? யார் வீட்டிலோ இழவு விழுந்தது போல் எனக்கென்ன என்று இறுகிப்போன முகத்துடன் ஏடு படிப்பவனை என்னென்று சொல்வது?

இதோ, பாடை கட்டும் வேலை முடியப்போகிறது. இந்த இறுதி வேளையிலாவது அவள் பக்கம் வந்தமர்ந்து அவளது துவண்ட கைகளைப் பற்றி, ஒரு துளிக்கண்ணீர் விடுகிறானா? ஒரு துளி போதுமே, குமுறிக்கொந்தளித்துக் கொண்டிருக்கும் அவள் ஆன்மாவைக் குளிரவைப்பதற்கு!

உறவுகள் கூட அவனது இந்த நடவடிக்கை கண்டு அசூயையுடன் பார்த்தபடி தங்களுக்குள் தாறுமாறான கதைகளை அசைபோட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தனைவருடம் தன் சுகதுக்கங்களைப்  பொருட்படுத்தாமல், அவனுக்காகவே சிரித்து, அவனுக்காகவே உடுத்தி அவனுக்காகவே வாழ்ந்தவளுக்கு அவன் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? இதையெல்லாம் பார்க்கவா இன்னும் அலைந்துகொண்டிருக்கிறேன்? அவள் ஆன்மா புலம்பியது.

முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. கொள்ளி வைத்து பதினாறாவது நாள் துக்கமும் கொண்டாடி முடித்தாகிவிட்டது. அம்மா, மாடு கன்றுகளைப் பராமரிக்கவேண்டும் என்று அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிவிட்டாள். மகள்கள் அவ்வப்போது நினைவு வந்து அவள் படத்தின் முன் நின்று அழுதனர். பின் இருவரும் அவர்கள் அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டு ரயிலேறிவிட்டனர்.

நாட்கள்வாரங்களாகி மாதங்களாயின. இவள் மட்டும் இன்னும் இங்கேயே அலைந்துகொண்டிருக்கிறாள். பிரிய மனமில்லாதவளைப்போல் வீட்டைச் சுற்றி சுற்றி வருகிறாள்.

வீடு நிசப்தமாயிருந்தது. அவளிருந்த காலத்தில் இப்படி  ஒருநாளும் இருந்ததில்லை. சன்னமாய் ஏதாவதொரு பாடலை எப்போதும் தன்னையறியாமலேயே முணுமுணுத்துக்கொண்டிருப்பாள். பிசிறில்லாத தேன்குரலில் மனம் தழுவும் பழைய பாடல்களைத்தான் பெரும்பாலும் பாடுவாள். அது வீடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதையும் அவன் ஒருநாளும் சிலாகித்துப் பாராட்டியதில்லை. அவளுக்கு வேதனை ஊற்றெடுத்துக் கழிவிரக்கம் பெருகியது..

'சே! ஏன் இப்படி எல்லாமே தொடர்ச்சியாய் நினைவுக்கு வந்து வந்து என்னை வாட்டுகின்றன? இப்படிப் பேயாய் அலையவா, நான் உன் தாயென வலம் வந்தேன்? உன்னையே என் உலகமென்று ஓயாமல் சுற்றிச் சுற்றி வந்தேன்? நான் இருந்ததும், இல்லாததும் உன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா? ஒரு நாற்காலிக்கால் உடைந்துபோனால் கூட அய்யோ, உடைந்துவிட்டதே! என்று உச்சு கொட்டுகிறோமே! எனக்கு அந்த நிலையும் இல்லையா? நான் என்ன அந்த ஜடப்பொருளினும் கீழானவளாய்ப் போய்விட்டேனா? என் முக்கியத்துவம் என்று எதுவுமே இல்லையா? இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்தான் என்ன? எனக்கு விமோசனமே கிடையாதா? நரிகளும், நாய்களும் ஊளையிடும் நள்ளிரவில் நிறைவேறாத ஆசைகளைத் தாங்கி இப்படியே அலையவேண்டியதுதானா?

ஆற்றாமையால் வெம்பிய அவள் குமுறலை, மெல்லிய விசும்பல் கலைத்தது. யார்? யார் இந்நேரத்தில்? ஏன்? எதற்காக

கூடத்துத் தரையில் குப்புறக்கிடந்தவனைக் கண்டு துணுக்குற்றாள். தலைக்கடியில் கோர்த்திருந்த கைகளின் வழியே கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. சின்ன சின்னதாய் எழுந்த தேம்பல் சட்டென வேகமெடுத்து பெருங்கேவலாய் எழ, இவள் பதறிப்போனாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக, அரவணைப்பார் இல்லாத குழந்தை போல் தொடர்ந்து கேவிக்கொண்டிருந்தான். அவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.

அவன் கைகளுக்கடியில் அவள் புகைப்படம்! அவனைச் சுற்றிலும் அவள் கட்டி ஓய்ந்த புடவைகள்அவள் வரைந்த திரைச்சீலை ஓவியம், அவள் சேகரித்துத் தொகுத்த தபால்தலை ஆல்பம், அவள் உபயோகப்படுத்திய பேனா, அவள் ரசித்த பாட்டு டிவிடிக்கள்…. இன்னும் இன்னும் அவள் புழங்கிய அவள் நினைவுகளைத் தாங்கிய அவனை உறுத்திக்கொண்டிருக்கும் ஏராளப் பொருட்கள்.... கரைகாண முடியாத தூரத்தில் துக்கத்தின் நடுக்கடலில் அவன் பிடிப்பற்று நீந்தித் தவித்துக்கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

அவனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. வாய்விட்டு எதையும் உரைக்காதபோதும் அவன் மனமொழி புரிந்தது அவளுக்கு. ஊமை வலியின் வேதனை அவள் அறியாததா? இன்பம், துன்பம் எதையுமே வாய்மொழி சொல்லியறியாதவன். அது அவன் குறையல்ல. அவனை சரியாய்ப் புரிந்துகொள்ளாத தன் குறையே என்பது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. தன்னை, தன் உணர்வுகளை அவன் புரிந்துகொள்ளவில்லையென்று அவனைக் குறை சொல்லியே சுற்றிய மனம், இப்போது, அவனை, அவன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தன்னைத் தானே குறைசொல்லி முறையிட்டது. குற்ற உணர்வின் பிடியில் அகப்பட்டவளுக்கு அவனழுத கண்ணீர் ஆறுதல் சொன்னது. காலங்கடந்து உணரப்பட்ட காதலை அவன் உணர்த்தும் காலமும் காலனால் பறிக்கப்பட்டிருந்தது.  அழுபவனைத் தேற்ற இயலாமல் தவித்தவள்காலத்தின் கையிலேயே அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அகன்றாள்.

தனக்குத்தானே சுவர்கள் எழுப்பி அதற்குள் அடைபட்டுக்கிடந்த அவன் உள்ளம் இப்போது தன் இருப்பை வெளிப்படுத்தும் எண்ணத்தோடு சுவருடைத்து வெளிவந்து உணர்த்துகிறது தான் ஒரு கல் அல்ல, கற்பூரம் என்பதை!

கற்பூரம் எரிந்துதான் தன் இருப்பைக் காட்டவேண்டுமென்ற அவசியம் இல்லையேகாற்றிலும் கரைந்து நிரூபிக்கலாம் அவனைப் போல. இவளும் காற்றோடு காற்றாய் மெல்லக் கரையத் தொடங்கினாள் அந்த கற்பூரம்போலவேஇனி அவளுக்கு அங்கென்ன வேலை?


                                                ******************
(ஜூன் 14, 21 ஆகிய தினங்களில் வெளியான தினமலர் பெண்கள் மலரில் வெளிவந்த கதை என்பதும் அச்சிலேறிய என் முதல் படைப்பு என்பதும் மகிழ்வு தரும் செய்திகள்.)


58 comments:

  1. அற்புதம். நிறைய விஷயங்கள் உயிரோடு இருக்கும்போதே பகிரப்படாவிட்டால் அப்புறம் என்ன பயன்? //அச்சிலேரிய என் முதல் கதை// வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஆரம்பத்தில் அந்த கணவன் மீது ஒருவித எரிச்சல் + கோபம் வந்தது... முடிவில் புரிதலில் குறைபாடு... அதுவும் "தன் குறையே" என்ற புரிதல் சிறப்பு...

    தினமலர் பெண்கள் மலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. காலங்கடந்து உணரப்பட்ட காதலை அவன் உணர்த்தும் காலமும் காலனால் பறிக்கப்பட்டிருந்தது. அழுபவனைத் தேற்ற இயலாமல் தவித்தவள், காலத்தின் கையிலேயே அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அகன்றாள்.//

    மிக அருமை. கதை படித்து முடிந்தவுடன் கண் ஓரத்தில் கண்ணீர் துளிகள்.
    மெய்சிலிர்த்தது.
    முதல் கதை அற்புதம் .

    உறவுகளின் அன்பு புரிந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்.
    நேரம் ஒதுக்கி உண்ர்வுகளை, அன்பை புரிந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  4. தினமலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
    ஆண்,பெண் இருவரும் புரிந்து கொள்ள வேண்டிய கதை.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அற்புதமான கதை
    இதைப் படித்த சில கற்கள் கூட
    தன்னைக் கற்பூரமாக நிச்சயம் மாற்றிக் கொள்வார்கள்
    மனம் கவர்ந்த அருமையான கதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கற்பூரம் எரிந்துதான் தன் இருப்பைக் காட்டவேண்டுமென்ற அவசியம் இல்லையே… காற்றிலும் கரைந்து நிரூபிக்கலாம் அவனைப் போல. இவளும் காற்றோடு காற்றாய் மெல்லக் கரையத் தொடங்கினாள்

    தினமலர் பெண்கள் மலரில் வெளிவந்த அருமையான கதைக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  8. முதல் படைப்பே இத்தனை நேர்த்திய ?
    தெள்ளிய நடை ,நல்ல கதையோட்டம்
    வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  9. நல்ல கதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரியையும், வார்த்தைகளையும், எழுத்துக்களையும், மிகவும் அணுஅணுவாக ரஸித்துப்படித்தேன்.

    மிக அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  11. //தான் எதிர்பார்ப்பது அவனிடம் புடவையோ நகையோ அல்ல, அன்பாய் ஆசையாய் ஒரு .......... போதும்... தலைவலி என்றால் டாக்டர் எதற்கு? கொஞ்சம் அமிர்தாஞ்சன் கொஞ்சம் கரிசனம் போதுமே…//

    ஆம். பொதுவாக பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கும் நியாயமான ஆசைகள் இவைகள் மட்டுமே.

    >>>>>

    ReplyDelete
  12. பொதுவாக சில ஆண்கள் இதுபோல ஜடமாகத்தான் இருக்கிறார்கள் என்று நான் ஒத்துக்கொண்டாலும், பெண்களிலும் இதுபோன்ற ஜடங்கள் உள்ளனர் என்பதை என்னால் மறுக்கவே முடியாது. நிரூபிக்கவும் முடியும்.

    >>>>>

    ReplyDelete
  13. வெகு அழகான கதை. ஆரம்பம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் தகுந்த சில உதாரணங்களுடன் சொல்லிப்போய் உள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மனதாரப்பாராட்டுகிறேன்.

    நல்லதொரு உள்ள உணர்வுகளும், மென்மையான மேன்மையான குணங்களும் நிறைந்தவர் ஒருவரால் தான் இதுபோன்று மிகச்சிறப்பாக எழுத முடியும் தங்களுக்கு என் ஸ்பெஷல் தனிப்பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  14. கதையின் தலைப்பும் அதற்கேற்ற முடிவும் நியாயமாக உள்ளது. ரஸிக்க வைத்தது.

    >>>>>

    ReplyDelete
  15. //(ஜூன் 14, 21 ஆகிய தினங்களில் வெளியான தினமலர் பெண்கள் மலரில் வெளிவந்த கதை என்பதும் அச்சிலேறிய என் முதல் படைப்பு என்பதும் மகிழ்வு தரும் செய்திகள்.)//

    மிக்க மகிழ்ச்சி. தினமலரின் ரெகுலர் வாசகரான என் கண்களில் ஏதோ இது அறியப்படவில்லை.

    வலைப்பதிவு வேலைகளால், நானும் முன்புபோல ஆர்வமாக சிரத்தையாக அனைத்தையும் படிப்பதும் இல்லை.

    தங்களுக்கு எழுத்துலகில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. மேலும் மேலும் பல்வேறு வெற்றிகளை எட்டவும் பத்திரிகைகளில் அடிக்கடி ஜொலிக்கவும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  16. Anonymous12/1/14 18:21

    .அச்சிலேறிய முதல் படைப்பு என்பது மகிழ்வு தரும் செய்தி
    இனிய நல் வாழ்த்து.
    மேலும் உயர்வுகள் நெருங்கி அணைக்கட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. உணர்வுபூர்வமான கதை, காலம் கடந்து காட்டும் அன்பு கடலின் மேல் பெய்த மழையாய் யாருக்கும் உதவாது என்பதை உணர்த்துகிறது பாராட்டுக்கள்

    ReplyDelete
  18. மனதிற்குள்ளே அன்பை வைத்துப் பூட்டிக் கொண்டு வெளிக்காட்டாமல் இருப்பவர்களுக்கு இக்கதை ஒரு படிப்பினையைத் தரும். பிறரிடம் அன்பு செலுத்துவது மட்டும் முக்கியமில்லை; அதை அவ்வப்போது ஏதாவது ஒரு விதத்தில் வெளிக்காட்டவும் வேண்டும். சரளமான நடையில் தொய்வின்றிச் செல்லும் கதை. உத்தியும் சிறப்பு. தினமலரில் வெளிவந்தமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  19. kalanga vaiththakathai valthukal thozi

    ReplyDelete
  20. பெண்களின் மன ஓட்டங்களை நுட்பமாகக் கையாண்டவர் கு.ப.ராஜகோபாலனைப்போல யாருமில்லை என்பது என் கருத்து. உங்களுக்கு அந்த நுட்பம் வருவதாகத் தெரிகிறது. முதல்கதையே பிரபல இதழில் வெளிவருவது உற்சாகத்தைத் தூண்டும். தொடர்ந்து எழுத வேண்டும் (என்முதல்கதை கல்கியில் இரண்டாம் பரிசுபெற்று வெளிவந்தும் நான் தொடரவில்லை என்பது வேறு!) வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  21. வித்தியாசமான கோணத்தில் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதமஞ்சரி! வெளிப்படுத்தாத‌ அன்பு இருந்தென்ன பயன்? இந்த ஒற்றை வரி க்ருத்தை மிக அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்!

    கதைக்கும் அது தினமலரில் பிரசுரமானதற்கும் இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

  22. வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  23. வணக்கம் சகோதரி
    தினமலரில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  24. முதல் பிரசுரக் கதைக்கு இனிய வாழ்த்துக்கள்.
    கதை படித்து அதனோடு ஒன்றித்து மனம் கலங்கி கண்ணில் நீர் வர வைத்துவிட்டது கதை.

    என்னதான் அன்பிருப்பினும் அதை வெளியே காட்டிவிட வேண்டும், வெளியே காட்டப்படாத அன்பு அடுத்தவருக்கு தெரிய நியாயமில்லையே. ஆனால் பலரும் இப்படித்தான் அன்பைக் காட்டுவதில்லை ஆனால் இப்படி ஏதும் ஒரு சந்தர்ப்பத்தின்போதுதான் உள்ளே இருப்பது தெரியவரும்.

    சுப்பராக சோகமான நல்ல கற்பனை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. கதையல்ல! குறுங் காவியம்! கலையாத ஓவியம்! வேறென்ன சொல்ல!
    வெளியிட்ட தினமலருக்கு நன்றி!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    ReplyDelete
  27. என்ன சொல்லீரீங்க ?

    ஒரு பொண்ணு ஆவியாப் போனாலும் அவளுடைய வீட்டுக்காரன் விம்மி விம்மி அழுவதை பார்த்தால்தான் அவளுக்கு திருப்தி?

    ReplyDelete
  28. @ஸ்ரீராம்.

    உடனடி வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  29. @திண்டுக்கல் தனபாலன்

    உடனடி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  30. @கோமதி அரசு

    இருமுறை கருத்திட்டு மனநெகிழ்வைக் காட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.

    ReplyDelete
  31. @Ramani S

    தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  32. @Ramani S

    நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  33. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  34. @Mythily kasthuri rengan

    இதுவே முதலில் அச்சிலேறிய என் படைப்பு என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்.
    வார்த்தையமைப்பில் சிறு தவறிழைத்துவிட்டேன் மைதிலி. அதனால் பொருளே மாறிப்போனமை குறித்து வருந்துகிறேன்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மைதிலி.

    ReplyDelete
  35. @செய்தாலி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி செய்தாலி.

    ReplyDelete
  36. @வை.கோபாலகிருஷ்ணன்

    பாராட்டுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  37. @வை.கோபாலகிருஷ்ணன்

    பெண்களின் நியாயமான ஆசைகள் என என் கருத்துக்கு வலுசேர்த்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  38. @வை.கோபாலகிருஷ்ணன்

    அன்பை வெளிப்படுத்துவதிலும் சரி, வெளிப்படுத்தாமலிருப்பதிலும் சரி, ஆண் பெண் பேதமே இல்லை சார். இந்தக் கதையில் ஆணைக் குறிப்பிட்டிருக்கிறேன். பல இடங்களில் பெண்களும் இப்படியிருக்கிறார்கள். மறுக்கவியலாது.

    ReplyDelete
  39. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்களுடைய ஸ்பெஷல் பாராட்டுகளுக்கு நெகிழ்வான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  40. @வை.கோபாலகிருஷ்ணன்

    இது தினமலர் பெண்கள் மலர் திருச்சி பதிப்பில் வெளியானதாக சொல்லியிருந்தார்கள். நானும் என் கண்ணால் இதுவரை பார்க்கவில்லை. ஊரிலிருந்து ஸ்கேன் எடுத்து அனுப்பியதை மட்டுமே பார்த்தேன்.

    தங்களுடைய ஆறு பின்னூட்டங்களுக்கும் மனந்திறந்த இனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சார்.

    ReplyDelete
  41. @kovaikkavi

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  42. @vimal

    வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி விமல்.

    ReplyDelete
  43. @கலையரசி

    சரியான புரிதல் அக்கா. தங்கள் வருகைக்கும் கதை பற்றிய கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  44. @Geetha M

    வருகைக்கும் கதை பற்றிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
  45. @நா.முத்துநிலவன்

    தங்களுடைய கருத்துரை அளவிலா உற்சாகம் தருவதாய் உள்ளது. மிக்க நன்றி ஐயா.

    என் குறிப்பில் தவறு நேர்ந்துவிட்டது என்பதை மைதிலிக்கு அளித்த மறுமொழியில் குறிப்பிட்டுள்ளேன். வார்த்தையமைப்பில் தடுமாறிவிட்டேன். இது முதலில் அச்சிலேறிய படைப்பு என்பதே சரி. முதல் கதை வேறு. தவறுக்கு வருந்துகிறேன்.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  46. @மனோ சாமிநாதன்

    வருகைக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மேடம்.

    ReplyDelete
  47. @கி. பாரதிதாசன் கவிஞா்

    தங்கள் வருகைக்கும் பொங்குதமிழில் இனிய கவியால் வாழ்த்தியமைக்கும் அன்பான நன்றி ஐயா. தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  48. @அ. பாண்டியன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாண்டியன். தங்களுக்கும் என் தாமதமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  49. @asha bhosle athira

    வருகைக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி அதிரா.

    தங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தாமதமானாலும் தெரிவித்து மகிழ்கிறேன்.

    ReplyDelete
  50. @புலவர் இராமாநுசம்

    தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா. தாமதமானாலும் தங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  51. @Mathu S

    ஒரு ஆணோ, பெண்ணோ, அவர்களுடைய இயல்பான ஆசைகள் நிறைவேற்றப்படாதபோது இதுபோல் ஏக்கங்கள் மனத்தில் சுழன்றுகொண்டிருப்பது நியாயம்தானே? அப்படியொரு ஏக்கத்தில் இருப்பவளுக்கு அவளை நினைந்து விடப்படும் ஒருதுளி கண்ணீரே போதுமானது. விம்மியழவேண்டுமென்ற அவசியமில்லை. கதைக்கான மிகைப்படுத்தல் அது.

    ஒருவர் மீது நமக்கு அன்பிருக்கும் பட்சத்தில் அது வாழும் காலத்திலேயே காட்டப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே கதையின் நோக்கம்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது.

    ReplyDelete
  52. வழக்கம்போல அருமையான கதை. அச்சிலேறியது கூடுதல் மகிழ்ச்சி. அநேகமாக எல்லாப் பெண்களும், (பல ஆண்களும்) ஒருமுறையேனும் அனுபவித்திருக்கக்கூடியதே.

    ReplyDelete
  53. @ஹுஸைனம்மா

    உண்மைதான் ஹூஸைனம்மா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  54. கதை அருமையாயிருக்கு.

    தினமலரில் வெளியானமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  55. @சாந்தி மாரியப்பன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சாந்தி.

    ReplyDelete
  56. இப்போதுதான் படிக்கக் கிடைத்தது. கதை வெகு அருமை கீதமஞ்சரி.

    ReplyDelete
  57. @இமா

    வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி இமா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.