29 April 2013

ஆதலினால் செய்த காதலிது!


 
 வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
நமக்கே உரித்தான நம் காதல்!
 
சீண்டுவாரற்று சித்தம் சலித்ததோ?
சின்னக்குழந்தை போல் மெல்ல ஊர்ந்து
விளையாடவருகிறது நம்மிடத்தில்!
 
விரட்டலும் விலக்கலுமின்றி
பாராமுகமாய் ஊடித்திரியும் நம்மிடையே
ஒளிந்துவிளையாடும் காதலுக்கு
ஒருவரிடமும் வரவேற்பில்லை.
 
நாளெல்லாம் ஒற்றையாய்
ஆடிக்களைத்து அருகமர்ந்த காதலை
போதும் விளையாட்டென்று
வாரியணைத்துக்கொள்கிறேன் வாஞ்சையுடன்!
 
காத்திருந்தாற்போல் நீயும்....
 கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்
காதலோடு என்னையும்!
*****************
(படம் உதவி: இணையம்)

40 comments:

  1. அள்ளிக் கொள்கிறாய்.. காதலோடு என்னையும்! இந்த வரிகள் வெகு அருமை! மனசை நனைத்துச் சென்றது காதலின் மெல்லிய ‌சாரல்! அருமைங்க!

    ReplyDelete

  2. காதலே காதலுக்குத் துணை.காதலே காதல் செய்யத் தூண்டும்.கற்பனை ரசித்தேன்.

    ReplyDelete
  3. கவிதையும் எங்களை அப்படியே காதலோடு அள்ளிச் சென்றது சகோ.......

    சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

  4. வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
    தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
    நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
    நமக்கே உரித்தான நம் காதல்!

    தொடக்கமுதல் இறுதி வரை காதல் உணர்வே கொடிகட்டி விளையாடுகிறது!

    ReplyDelete
  5. kaathalinaal seytha kaathal manam thottathu vaazhththukkal

    ReplyDelete
  6. ஊடலும் கூடலும் கண் முன் காட்சியை வந்து தோழி அருமையான பகிர்வு உணரமுடிகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காத்திருந்தாற்போல் நீயும்....
    கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்
    காதலோடு என்னையும்!//
    ஆதலினால் காதல் அருமை தலைப்பே!
    காதல் இல்லாத மானிடம் இல்லை.

    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //வாரியணைத்துக்கொள்கிறேன் வாஞ்சையுடன்!//

    கவிதை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மென்மையான வரிகள் - அருமை கீதமஞ்சரி.

    ReplyDelete
  10. //காத்திருந்தாற்போல் நீயும்....
    கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்
    காதலோடு என்னையும்!//

    அப்பறம் ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  11. ரசிக்க வைக்கும் சிந்தனை வரிகள்...

    அப்புறம் - சூப்பர் தாத்தா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. ஊடலின் பின்னான கூடலை காதலோடு சொல்லிப்போன கவிதை அழகு.

    கவிதையும் அழகு! :)

    ReplyDelete
  13. //வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
    தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு//



    வீம்பு கோபம் ஊடல் எதுவாக இருந்தாலும் காதல் அங்கேயே தான் இருக்கிறது !!!! அழகான கவிதை கீதா

    ReplyDelete
  14. ஊடலின் பின்னால் கை கொள்ளாது அள்ளிக்கொள்ளும் காதல் நிறைந்து வழிகின்றது.

    ReplyDelete
  15. ஊடல் காதலுக்கு இன்பம்...
    கூடுதல் இல்லா ஊடல் ஏது ?

    ReplyDelete
  16. மிகவும் அருமையான வரிகளுடன்
    அழகுக் கோர்வையாக
    புனையப்பட்ட கவிதை சகோதரி...
    ஆதலின் காதலுடன் வாசித்துவிட்டேன்....

    உரசிச் செல்லும்
    பூங்காற்றே
    உனக்கும் எனக்கும்
    ஊடலாம் ....
    பட்டு மேனியாம்
    என் தளிர் இலைகளை
    நீ தொட்டுச் செல்லும் போதெல்லாம்
    கொஞ்சம் கோபம்
    முட்டத்தான் செய்கிறது
    ஆயினும் அந்த
    மோகன வருடல்
    தேவையாகிறது என்னுள்
    எனக்கான உயிர்ப்புக்காக....

    ReplyDelete
  17. அழகான வரிகள். எங்களையும் இன்புறச் செய்தது.

    ReplyDelete
  18. /ஒளிந்துவிளையாடும் காதலுக்கு
    ஒருவரிடமும் வரவேற்பில்லை.

    நாளெல்லாம் ஒற்றையாய்
    ஆடிக்களைத்து அருகமர்ந்த காதலை
    போதும் விளையாட்டென்று
    வாரியணைத்துக்கொள்கிறேன் வாஞ்சையுடன்!/

    அருமையான வரிகள். கவிதை நன்று.

    ReplyDelete
  19. ஊடலும் கூடலும் சொல்லும் அருமைக் கவிதை..வாழ்த்துகள் கீதமஞ்சரி!

    ReplyDelete
  20. Anonymous1/5/13 05:11

    ''..காத்திருந்தாற்போல் நீயும்....



    கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்



    காதலோடு என்னையும்!..''
    arumai.
    eniya vaalththu.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  21. @பால கணேஷ்

    முதல் வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  22. @G.M Balasubramaniam

    வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  23. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  24. @புலவர் இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  25. @Ramani S

    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  26. @கோவை மு சரளா

    கவிதை உணர்வை உள்வாங்கியமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சரளா.

    ReplyDelete
  27. @கோமதி அரசு

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  28. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  29. @இமா

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி இமா.

    ReplyDelete
  30. @sury Siva

    அப்புறமா? அதையெல்லாம்தான் முண்டாசுக்கவிஞன் மூடுதிரை போடாமல் முழுவதுமாய் சொல்லிவிட்டானே... :)

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சுப்பு தாத்தா.

    ReplyDelete
  31. @திண்டுக்கல் தனபாலன்

    சுப்பு தாத்தா - சூப்பர் தாத்தாதான்!

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  32. @மணிமேகலா

    வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  33. @angelin

    சரியா சொன்னீங்க. வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  34. @மாதேவி

    கவிதையை ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  35. @நிலாமகள்

    இரண்டும் இணைந்து இருப்பதால்தானே ஓடுகிறது வாழ்க்கை வண்டி! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  36. @மகேந்திரன்

    அட, என்ன அழகான ரசனை! வருகைக்கும் அழகான மனந்தொட்டப் பின்னூட்டக் கவிதைக்கும் நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  37. @கோவை2தில்லி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  38. @ராமலக்ஷ்மி

    ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  39. @கிரேஸ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  40. @kovaikkavi

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தோழி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.