எத்தனை முறை யோசித்தாலும்
எண்ணத்துக்கு அகப்படாமல்
ஏய்த்து விளையாடுகிறது ஏதோவொன்று!
கணகாலத்துக்குப் பின் கருவான
அந்தக் கவிதையின் ஓட்டத்துக்கு
அநேகமாய் ஈடுகொடுத்துவிட்டன
அத்தனை வார்த்தைகளும்,
அந்த ஒன்றைத் தவிர!
மூளைக்குள் முரண்டுபிடிக்கும் அவ்வார்த்தையைக்
கட்டிக்கொணர எத்தனைமுறை ஏவினாலும்
வெறுமனே திரும்பிவருகிறது நினைவுபூமராங்!
அவ்வார்த்தைக்கு நிகராய் வேறொன்றை
இட்டு நிரப்பவும் மனமொப்பவில்லை.
முற்றியும் முற்றாமல்
மூளியெனக் கிடக்கும் அக்கவிதை,
ஒரு முதிர்கன்னியின் மனவழுத்தத்தோடு
ஏளனமும் ஏக்கமுமாய்
என்னைப் பார்க்கும் பார்வையில்
குறுகுறுத்துக் கவிழ்கிறது என் கவியுள்ளம்!
அஜீரணக்காரனின் நெஞ்செரிச்சல் போல்
அடிக்கடி நினைவுக்கு வந்தும் வராமலும்
உள்ளெரிக்கும் அந்த வார்த்தை என்னவென்று
உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.
குறைந்தபட்சம் உங்கள் கவிதையொன்றிலாவது
அதைப் பயன்படுத்துவதன்மூலம்
என் கவனத்துக்குக் கொண்டுவருவீராயின்
மழலையைப் பிரிந்த தாயைப் போல
மன்றாடி நிற்கும் கவிதையிடம் சேர்ப்பித்து
நன்றியோடு நான் ஆசுவாசமடைவேன்!
With havin so much content and articles do you ever run into any
ReplyDeleteissues of plagorism or copyright infringement? My website has a lot of completely
unique content I've either authored myself or outsourced but it appears a lot of it is popping it up all over the internet without my authorization. Do you know any methods to help protect against content from being stolen? I'd really appreciate it.
Look into my web-site: dream sharing
nalla kavithai nadai....
ReplyDeleteungalukke mudiyalai ennaal mudiyumaa...
theriyala...
அது எந்த வார்த்தை?...!! அந்த முதிர் கன்னியைப் போன்று முற்றுப் பெறாமல் நிற்கும் கவிதை விரைவில் அந்த வார்த்தையுடன் இணைத்து மகிழ்விற்க மன்றம் வர வேண்டும் என்றே வாழ்த்துகின்றேன்
ReplyDeleteஎன் தோழி ! அருமையான கவிதை இதுவும்....
மழலையைப் பிரிந்த தாய் போல மன்றாடி நிற்கிறதா கவிதை? அருமைங்க கீதா! கவிதை என்கிற வடிவம் எனக்கு வசப்படாத ஒன்றாக இருப்பினும், ஒரு வார்த்தைக்காகப் படும் அவஸ்தையை என்னால் நன்கு உணர முடிகிறது. அதை அழகான கவிதையாய் இங்கே காண்கையில் வியக்க முடிகிறது. சூப்பர்ப்!
ReplyDeleteகீதமஞ்சரி, உள்ளத்தில் நெருடும் ஒருவார்த்தையைப்பற்றிய கவிதை அருமை.
ReplyDeleteஎப்படிங்க ?வார்த்தைகள் இல்லை தனியாக பிரித்தெடுக்க எதை சொல்ல அற்புதம் !!!!!!!!!!!
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteஅந்த வார்த்தை கிடைக்காது அல்லாடும் மட்டும்தான்
நல்ல படைப்பாளியாய் யாரும் இருக்க முடியும்
என நினைக்கிறேன்.தங்களுக்கு கடைசிவரையில்
அந்த வார்த்தை கிடைக்காமல் இருக்கட்டும்
தேடும் முயற்சியில் இதுபோன்ற அற்புதமான கவிதைகள்
தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteம்ம்ம்........அருமை
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteதேடிச் செல்லும் வரையில் சந்தோஷம் நமது!
ReplyDeleteஅன்பு...
ReplyDeleteஅன்பு வாழ்த்துக்கள்...
அசப்பில் மனுஷ்யபுத்திரன் கவிதையோ என்று ஏமாந்துபோனேன். அந்த ‘ஒரு’ வார்த்தையைத் தானே இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள், எல்லாக் கவிஞர்களும்! அந்த ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் போதாதா, ஒரு காவியமே படைத்துவிடலாமே!
ReplyDelete@Seeni
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சீனி.
@????????????
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.
@அம்பாளடியாள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.
@பால கணேஷ்
ReplyDeleteகவிதையை ரசித்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி கணேஷ்.
ரிப்ளை பட்டன் இணைக்க வழிகாட்டியமைக்கு நன்றி கணேஷ். நிறைய முயற்சி செய்தும் ரிப்ளை பட்டன் முறையாக வேலை செய்யாதது போல் தோன்றுகிறது. எனக்கு கணினி அறிவு குறைவு என்பதால் இருக்கலாம். இன்னும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். என்றாவது சரியாக வரும் என்ற நம்பிக்கையில். :)
@கோமதி அரசு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.
@poovizi
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க பூவிழி.
@Ramani S
ReplyDeleteமிக அழகாக கவிதையை உள்வாங்கி கருத்திட்டமைக்கு மிக மிக நன்றி ரமணி சார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
@செய்தாலி
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றிங்க செய்தாலி.
@Bala subramanian
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.
@கே.பி.ஜனா
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள். நன்றிங்க ஜனா சார்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அன்பு வாழ்த்துக்கும் அகம் நிறைந்த நன்றிங்க தனபாலன்.
@Chellappa Yagyaswamy
ReplyDeleteமிகவும் மகிழ்வாக உள்ளது. தாங்கள் ரசித்தமைக்கும் அழகாக விமர்சித்தமைக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.
வார்த்ஹை தேடி அலைகிற அலைசல்.கவிதையாய் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅந்த வார்த்தை உணர்தலில் மட்டுமே சாத்தியம் தோழி ....
ReplyDeleteவிண்ணப்பக் கவிதை அழகு கீதா.
ReplyDeleteமுதிர்கன்னியின் ஏக்கம் போலவும் அஜீரணத்தின் அவஸ்தைபோலவும் நின்றுலாவும் சொல்.
நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.அது கவைதையின் எதுகையோடு வந்தால் தான் கூட அழகு; மற்றும் பொருத்தம் இவை எல்லாம் வரும். எனினும் சில சொற்கள் பொருந்துமா பாருங்கள் கீதா.
ஊமையுளைச்சல்,
அகச் சீற்றம்/ அறச் சீற்றம்
உள்ளகப் புயல்
அகக் காச்சல்
மனப்பிரளயம்.
@விமலன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விமலன்.
@கோவை மு சரளா
ReplyDeleteஉண்மைதான் சரளா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ மணிமேகலா
ReplyDeleteமனம் நெகிழ்ந்து போனேன் மணிமேகலா... மிக மிக நன்றி தோழி.
அள்ளித்தந்த அநேக அற்புத வார்த்தைக் குழந்தைகளை மடியோடு வாரியணைத்துக்கொண்டபின்னும் முன்னே தவறவிட்டக் குழந்தையை முனைப்பாய் தேடுகிறதே அந்த பாழாய்ப்போன கவிதைத்தாய்! என்ன செய்வேன்?
ReplyDeleteநினைத்ததை உணர வைக்கும் வார்த்தை நெஞ்சுக் குழிக்குள் நிற்கும் வார்த்தை நினைக்காத நேரத்தில் முன் வந்து சதிராடும் வார்த்தை.... ஓ இதற்கா இவ்வளவு அவஸ்தை என்று சிரிக்கும் வார்த்தை வெறுமே கண்ணாமூச்சி விளையாடுகிறதோ. ? கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
@G.M Balasubramaniam
ReplyDeleteஆம் ஐயா... கண்ணாமூச்சி ஆடும் ஒரு வார்த்தை பல சமயம் கவிதையின் ஆழத்தை உள்வாங்கத் தவறிவிடுகிறதே..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
உங்கள் கவிதைகளில் நல்ல நேர்த்தி தெரிகிறது.. அதனுள் ஊடாடும் அர்த்தம் ரசனையைத் தூண்டுகிறது.. நல்வாழ்த்துகள்.
ReplyDelete@ரிஷபன்
ReplyDeleteவருகைக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ரிஷபன் சார்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.வெளியூர் சென்றிருந்ததால் உடனே கருத்திட முடியவில்லை
ReplyDelete//ஒரு முதிர்கன்னியின் மனவழுத்தத்தோடு
ஏளனமும் ஏக்கமுமாய்//
இது ரொம்ப ஆழமானது ஆனாலும் வருத்தமானது.உங்களின் கவிதை சீக்கிரம் நினைவுக்கு வரும்.வாழ்த்துக்கள்
@கவியாழி கண்ணதாசன்
ReplyDeleteதங்கள் வருகையையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ஐயா.