11 May 2011

பரிதாப வாழ்வு யாருக்கடி?

கொட்டாங்கச்சியில் சேறு குழைத்து
சோறென்று சொல்லிப் பரிமாறுவோம்;
சொட்டுநீரை மண்ணில்விட்டு
இட்டிலியென்றே பக்குவமாய் எடுப்போம்.

பூவரச இலையில் பீப்பீ செய்து
நாதசுர கானம் இசைப்போம்;
சிறுகுச்சியொன்றை மணலில் ஒளித்து
கிச்சுகிச்சுத் தாம்பாளமென்றே தேடுவோம்;

கூழாங்கற்கள் தேர்ந்தெடுத்து
கல்லாம் காய் விளையாடுவோம்;
குமரிகளாய் எம்மை எண்ணி
கூட்டாஞ்சோறும் ஆக்குவோம்;

ஓட்டாஞ்சில்லுகளை உதைத்து
நொண்டி விளையாடுவோம்;
தாயக்கட்டம் தரையில் வரைந்து
காய்களை மலையில் பழுக்கவைப்போம்;

புளியங்கொட்டைகளைப் பொறுக்கி
பல்லாங்குழியில் முத்துச் சேர்ப்போம்;
கண்ணாடி வளையற் துண்டுகளை
கவனமாக ஜோடி சேர்ப்போம்;

கயிறு தாண்டிக் குதிப்போம்;
வண்ணம் சொல்லித் தேடுவோம்;
கணநேரம் கிடைத்தாலும்
கண்ணாமூச்சி ஆடுவோம்;

உட்கார ஒரு மணற்குவியல்,
ஒன்றிரண்டு சொப்புகள் என்று
உள்ளதைக் கொண்டு விளையாடி
சமர்த்துப் பெண்களாய் நாங்களிருக்க

பளிங்குகளும், பம்பரமும்,
பட்டமும், நூலும் வாங்க
காசு கேட்டுப் பையன்கள் எல்லாம்
காலைப் பிடிப்பர் அம்மாவிடம்!

வாங்கிய சற்று நேரத்திலேயே
பளிங்குகள் உடைந்துபோகலாம்;
பம்பரங்கள் தெறித்தோடலாம்;
பட்டங்களும் அறுபடலாம்;

மனமுடைவதில்லை சிறுவர்கள்!

பனங்காய் வண்டியும்,
மிதிவண்டி உருளையும்,
பழையபடி ஓட்டிச்செல்ல,
புறப்பட்டுவிடுவர், உற்சாகத்துடன்!

சந்துபொந்துகளில் எல்லாம்
பந்து விளையாடுவர்;
பச்சைக்குதிரை தாண்டுவர்;
குந்தி விளையாடச் சொன்னல்
கொஞ்ச நேரம் ஆடுவர்,
ஆடுபுலி ஆட்டம்!

சுட்டிப் பையன்கள் வைத்திருக்கும்
கிட்டிப்புள்ளும், உண்டிவில்லும்
எத்தனை சாபம் ஏற்றன என்று
எண்ணில் சொல்ல இயலாது!

இப்படித்தானடிப் பெண்ணே,
இன்பமாய்க் கழித்தோம், எம்
இளம்பிள்ளைப் பிராயத்தை!
என்றே ஏக்கத்துடன் எடுத்துரைத்தேன்,

'தொலைக்காட்சியும், கணினியும்
இல்லாத உன் காலத்தில்
எதைக் கொண்டு அம்மா உன்
இளவயதைக் கடத்தினாய்?'
என்று பரிதாபத்துடன்
என்னை வினவிய
என் பத்து வயது மகளிடம்!

30 comments:

  1. அத்தனையும் நீங்களா எழுதினீர்கள்...
    எல்லாமே நன்று என்று சொல்லி விட முடியாவிட்டாலும் எதுவுமே மோசம் இல்லை..

    சில கவிதைகள் நம்மை பிள்ளை பிரயத்துக்கு அழைத்து செல்கின்றன

    ReplyDelete
  2. அருமை ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Anonymous12/5/11 18:37

    If the poem is original, kudos to u.

    Yesterday I was reading some sangam poetry. In many, the poets referred to the play games of children, the hobbies of young people and other things which they saw.

    For these insights into the society of the sangame age, the Sangam poetry is regarded as historical documents to know our ancient past. Historians do not reject the sangam poetry as fiction. They give validity to them by relying on them. Thus, sangam poetry serves the dual purpose of being litarature and history.

    Ur poem here serves the same purpose. It lists the kinds of play or games children loved in TN some decades ago. And, no doubt, all entered into irretrievable history.

    ...ப‌ழ‌ங்க‌தையாய் மெல்ல‌ப் போன‌துவே !

    I would suggest you preserve this poem in a time-capsule and bury it deep under the earth in your garden or courtyard. Add some more abt the sort of life u lived, w/o naming u or anyone.

    After some centuries, if happenstance someone will dig the ground where u now live, he or she or they will stumble upon ur timecapsule will help them know how their forefathers lived in ancient past. Eureka !

    Good poem. When u dont think or write abt the mumbo-jumbo called religion, u r very very good in writing such poems :-)

    புல‌வ‌ர் உருத்திர‌ன் ப‌ட்டின‌ப்பாலையில் எழுதிய‌து பாட‌லிலிருந்து:

    இடைக்குல‌ ம‌க‌ளிர் புலியின‌து முழ‌க்க‌ம்போல் ஒலியுகுண்டாகும்ப‌டி த‌யிர் க‌டைத‌லும்
    காலையில் நெல்லுக்கு மோர் விற்ற‌லும்
    குறிஞ்சி நில‌த்திலே சென்று நெய்யை விற்று எருமை முத‌லிய‌வைக‌ளை வாங்கிக்கொள்ளுத‌லும்
    இடைய‌ர் குடியிருப்பிலே தினைய‌ரிசிச் சோற்றினைப் பாலொடு பெற‌க்கூடுமென்றும்
    முல்லை நில‌த்திலே வ‌ர‌கு முத‌லிய‌வ‌ற்றை விதைத்து உழுதுண்ப‌தையும்
    வ‌ர‌க‌ரசியோடு அவ‌ரைவிதைப்ப‌ருப்பை ஒன்றாய்ப் பொங்கியுண்ண‌லும்
    ம‌ருத‌னில‌த்திலே செந்நெல் முத‌லிய‌ ப‌ல‌வ‌கை உண‌வுப் பொருள்க‌ளின் வ‌ள‌ங்க‌ளும்
    த‌ச்ச‌ர்க‌ள் வீட்டுச்சிறுபிள்ளைக‌ள் சிறுதேருருட்டி விளையாடலும்
    செவிலித்தாயின் முலைப்பாலுண்டு துயில்கொள்ளுமிய‌ல்பும்
    தொழில் செய்வார் வெள்ளிய‌ நெற்சோற்றோடு கோழியூனை க‌ல‌ந்துண்ட‌லும்
    வ‌லைஞ‌ர்க‌ள் கொழிய‌ல‌ரிசியிலிருந்து செய்த‌ க‌ள்ளினை இறைச்சியோடு உண்ண‌லும்
    த‌மிழ்ப்பார்ப்பார் வீடுக‌ளிலே க‌ற்புடைப் பெண்டிர் உய‌ர்ந்த‌ நெல்லுண‌வும், மாதுள‌ங்காய், மிள‌குப்பொடி, க‌ருவேப்பிலை, வெண்ணெய் இவைக‌ளைக் க‌ல‌ந்து செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌றியோடு
    மாவ‌டு ஊறுகாயும் இடுத‌லும்
    ம‌க‌ளிர் ப‌ந்தாட்ட‌மும், க‌ழ‌ங்காடுத‌லும், பெரிய‌ மாட‌ங்க‌ளின் மீதேற்றிய‌ விள‌க்கு
    ம‌ர‌க்க‌ல‌ங்க‌ளுக்கு ஊரின் க‌ரையைக் காட்டிக் கூவுந்த‌ன்மையுடையன‌ என்றும்

    “விண்போர‌ நிவ‌ந்த‌ வேயா மாட‌த்
    திர‌லின் மாட்டிய‌ வில‌ங்குசுட‌ர் ஞெகிழி
    உர‌வுநீ ர‌ழுவ‌த் தோடுக‌ல‌ங் க‌ரையும்"

    என்றெல்லாம் பாட‌ப்ப‌ட்டு ச‌ங்க‌ப்பாட‌ல்க‌ள் வ‌ர‌லாற்றுபேழைக‌ள் ஆகின‌.

    கீதா சாம்ப‌சிவ‌ம் பாட‌ல்க‌ள் ஆகாத‌ பின்னே !

    ReplyDelete
  4. விடுமுறை நாட்களில் ஆற்றில் குளித்தது. கொஞ்சம் கூட நண்பர்கள் சேர்ந்தால் குட்டியாக திருவிழா கொண்டாடியது. அதுவுமே இல்லாத இன்றைய நிலைதான் வெறுமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Anonymous12/5/11 23:06

    என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே!

    ithu aar eluthiyathu ? superbly composed

    Bharathi daasan maathirilla irukku

    Simmakkal
    (Jo.Amalan)

    ReplyDelete
  6. கீதா...இளமைக் காலத்தை அப்படியே உருக்கிச் செதுக்கி வைத்திருக்கிறீர்கள் மனதிற்குள்.இன்றைய நம் பிள்ளைகளுக்கு புழுதியும்,பூச்சியும் அருவருப்பாம்.மழையில் விளையாடும் சுகமே தனிதான் !

    ReplyDelete
  7. ஐயோ.... என்னாச்சு என் ப்ளாக்குக்கு? ஐந்தாறு நண்பர்களின் கமெண்ட்டெல்லாம் எப்படி அழிந்தன? இரண்டு நாளாக என்னால் என் வலைப்பூவுக்குள் நுழையவே முடியவில்லை. கருத்துகள் அழிபட்டதற்கு மன்னிக்கவேண்டுகிறேன் நண்பர்களே... காரணம் என்னவென்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  8. @ மனோவி

    வருகைக்கும் கருத்திட்டதற்கும் நன்றி. இது ஒரே கவிதைதாங்க. படங்களை இடையில் இணைத்ததால் கோர்வையாகப் பிடிபடவில்லையென்று நினைக்கிறேன்.

    @ ஹேமா

    வருகைக்கும் கருத்திட்டதற்கும் நன்றி ஹேமா

    @ கவிதைவீதி செளந்தர்

    பாராட்டுக்கு நன்றி.

    @ சாகம்பரி

    குளத்தில் கும்மாளமிடும் சுகமே தனிதானே கருத்துக்கு நன்றி சாகம்பரி.

    @ சிம்மக்கல்

    சங்கப்பாடல் பற்றியெல்லாம் நிறைய எழுதியிருந்தீர்கள். எல்லாம் காணாமற்போய்விட்டதில் எனக்கு அளவிலா வருத்தம். என்ன செய்ய? :(

    இந்தக் காலத்துக் குழந்தைகள் எப்பொழுது பார்த்தாலும் கணினி மற்றும் தொலைக்காட்சி முன் அமர்ந்தே காலத்தைக் கழிக்கின்றனர். இதில் அந்தக்காலத்தில் இவையெல்லாம் இல்லாமல் உங்களுக்கு எப்படிப் பொழுதுபோனது என்ற பரிதாபக் கேள்வி வேறு. அவர்களுக்கு எடுத்துச் சொல்வதுபோல் எழுதிய கவிதைதான் இது.

    மற்றும் பெயர் விடுபட்ட மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பெயர்களை மனதில் பதிக்கத் தவறிவிட்டேன். எங்கே போகப்போகிறோம் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும் நண்பர்களே.

    ReplyDelete
  9. 'தொலைக்காட்சியும், கணினியும்
    இல்லாத உன் காலத்தில்
    எதைக் கொண்டு அம்மா உன்
    இளவயதைக் கடத்தினாய்?'
    என்று பரிதாபத்துடன்
    என்னை வினவிய
    என் பத்து வயது மகளிடம்!//
    கவிதைகள் பிள்ளை பிரயத்துக்கு அழைத்து செல்கின்றன...

    ReplyDelete
  10. சிறுவயதில் நாமெல்லாம் வாழ்ந்தோம்
    இப்போதெல்லாம் சிறுவர்களை வாழவிடாது
    வாழ்வுக்கான தயாரிப்பில்மூச்சு திண்ர
    அமுக்கி அமுக்கி எடுக்கிறோம்
    பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்
    சிந்தனையை தூண்டிச் செல்லும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தொலைக்காட்சியும் கணினியும் தான் அவர்களின் இளமையை கடத்துகின்றன என்று சொன்னீர்களா உங்கள் மகளிடம் ? அருமையான கவிதை. என் இளைமைக் காலத்துக்கு அழைத்து சென்று விட்டது .

    ReplyDelete
  12. கவிதை கொணர்ந்த நினைவைக் கணிணி சாப்பிடவில்லையே என்று சந்தோஷப் படவேண்டியது தான். சுவாரசியமான கவிதை.

    கொட்டாங்குச்சி இட்லி, பல்லாங்குழி, கண்ணாமூச்சிக்குப் பதிலாக அடுத்த தலைமுறை தங்கள் வளர்பிராயத்தை ஐபாட் செல்போன் பேஸ்புக் காலங்கள் என்று பெருமூச்சு விடுவார்களோ?

    ReplyDelete
  13. இன்று யாருக்கும் அதெல்லாம் தெரியாது. எல்லாம் இப்படி கவிதையில் படித்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    நடுவில் ப்ளாகரில் ஏற்ப்பட்ட பிரச்சனையில் நெறைய கமென்ட் காணமல் போய்விட்டது

    ReplyDelete
  14. கீதா! மிக நேர்த்தியாய், நம் நினைவிலேமட்டுமே இன்னமும் ஆடிக்கொண்டிருக்கும் விளையாட்டைஎல்லாம் பதிந்திருக்கிரீர்கள்.
    இன்றைய தலைமுறைக் குழந்தைகள் நிறையத்தான் இழந்திருக்கின்றதல்லவா?

    ReplyDelete
  15. @ இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

    @ Ramani

    உண்மைதான். இப்போதிருக்கும் போட்டி நிறைந்த உலகில் அவர்களைத் தயார்படுத்துகிறோமென்று குழந்தைப் பருவத்தைப் பணயம் வைத்துவிடுகிறோம். கருத்துக்கு நன்றிங்க ரமணி.

    @ சிவகுமாரன்

    ஆமாம், அவர்களோ நம்மை நினைத்துப் பரிதாபப்படுகிறார்கள். கருத்துக்கு நன்றி சிவகுமாரன்.

    @ அப்பாதுரை

    சரியா சொன்னீங்க... அவர்களுடைய பால்யம் அதில்தானே முடங்கிக்கிடக்கு. கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  16. @எல் கே.

    இன்றிருக்கும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அதிலும் வெளிநாடுகளில் வாழும் குழந்தைகளின் நிலை.... சொல்லவே வேண்டாம். கருத்துக்கு நன்றி எல் கே.

    எல்லா பிளாக்கிலும் இதே நிலைதானா? எனக்கு மட்டும் என்று நினைத்து ரொம்ப பயந்துவிட்டேன்.

    @மோகன்ஜி

    இன்றைய தலைமுறை நம்மை விடவும் அதிகம் பெறுகின்றனர். நம்மை விடவும் அதிகம் இழக்கவும் செய்கின்றனர். காலத்தையும் சூழலையும் எண்ணி மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான். வருகைக்கு நன்றி மோகன்ஜி.

    ReplyDelete
  17. >>கீதா said...

    ஐயோ.... என்னாச்சு என் ப்ளாக்குக்கு? ஐந்தாறு நண்பர்களின் கமெண்ட்டெல்லாம் எப்படி அழிந்தன? இரண்டு நாளாக என்னால் என் வலைப்பூவுக்குள் நுழையவே முடியவில்லை. கருத்துகள் அழிபட்டதற்கு மன்னிக்கவேண்டுகிறேன் நண்பர்களே... காரணம் என்னவென்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை.

    பயப்படேல்.அனைவருக்கும் இதே பிராப்ளம் தான். பிளாக்கர் ஃபால்ட்

    ReplyDelete
  18. எழுத்துக்கள் முதல் பாதியில் பெரிதாகவும், அடுத்த பாதியில் சிறிதாகவும் இருக்கே.. சரி பண்ணுங்க..

    ReplyDelete
  19. வலைப்பூ பிரச்சனை இப்பத்தான் புரியுது.

    எழுத்துகளை சீராக்கிவிட்டேன். நன்றி செந்தில்குமார்.

    ReplyDelete
  20. எல்லாம் கனாக்காலமாகிவிட்டது.

    இந்த கூகுள் உங்களையும் விடலையா/என் பதிவு ஒன்று காணாமலே போய்விட்டது.

    ReplyDelete
  21. அனைவரின் குழந்தை பருவத்தை மீட்டெடுக்க வைத்துவிட்டீர்கள்....
    நன்றி கீதா!!!

    ReplyDelete
  22. கருத்துக்கு நன்றி ஆச்சி.

    பதிவே காணாமல் போயிட்டுதா....? அடப்பாவமே.

    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி நல்லவன்.

    ReplyDelete
  23. மின்னஞ்சல் மூலம் அழிந்த பின்னூட்டங்களைப் மீளப்பெற முடியும் என்ற தகவல் இப்போதுதான் தெரிந்தது. அத்தனையும் பெற்றுவிட்டேன். ஆனால்.... என் பெயரில்தான் பதிவிடமுடிகிறது.:(

    கவிதை வீதி # செளந்தர் said...

    அசத்தலான கவிதை..

    சாகம்பரி said...

    விடுமுறை நாட்களில் ஆற்றில் குளித்தது. கொஞ்சம் கூட நண்பர்கள் சேர்ந்தால் குட்டியாக திருவிழா கொண்டாடியது. அதுவுமே இல்லாத இன்றைய நிலைதான் வெறுமை. வாழ்த்துக்கள்

    saravanan said...

    அருமை ...வாழ்த்துக்கள்.
    ----------------------------------------

    நன்றி செளந்தர்,

    நன்றிசாகம்பரி,

    நன்றி சரவணன்.

    ReplyDelete
  24. simmakkal said...

    If the poem is original, kudos to u.

    Yesterday I was reading some sangam poetry. In many, the poets referred to the play games of children, the hobbies of young people and other things which they saw.

    For these insights into the society of the sangame age, the Sangam poetry is regarded as historical documents to know our ancient past. Historians do not reject the sangam poetry as fiction. They give validity to them by relying on them. Thus, sangam poetry serves the dual purpose of being litarature and history.

    Ur poem here serves the same purpose. It lists the kinds of play or games children loved in TN some decades ago. And, no doubt, all entered into irretrievable history.

    ...ப‌ழ‌ங்க‌தையாய் மெல்ல‌ப் போன‌துவே !

    I would suggest you preserve this poem in a time-capsule and bury it deep under the earth in your garden or courtyard. Add some more abt the sort of life u lived, w/o naming u or anyone.

    After some centuries, if happenstance someone will dig the ground where u now live, he or she or they will stumble upon ur timecapsule will help them know how their forefathers lived in ancient past. Eureka !

    Good poem. When u dont think or write abt the mumbo-jumbo called religion, u r very very good in writing such poems :-)

    புல‌வ‌ர் உருத்திர‌ன் ப‌ட்டின‌ப்பாலையில் எழுதிய‌து பாட‌லிலிருந்து:

    இடைக்குல‌ ம‌க‌ளிர் புலியின‌து முழ‌க்க‌ம்போல் ஒலியுகுண்டாகும்ப‌டி த‌யிர் க‌டைத‌லும்
    காலையில் நெல்லுக்கு மோர் விற்ற‌லும்
    குறிஞ்சி நில‌த்திலே சென்று நெய்யை விற்று எருமை முத‌லிய‌வைக‌ளை வாங்கிக்கொள்ளுத‌லும்
    இடைய‌ர் குடியிருப்பிலே தினைய‌ரிசிச் சோற்றினைப் பாலொடு பெற‌க்கூடுமென்றும்
    முல்லை நில‌த்திலே வ‌ர‌கு முத‌லிய‌வ‌ற்றை விதைத்து உழுதுண்ப‌தையும்
    வ‌ர‌க‌ரசியோடு அவ‌ரைவிதைப்ப‌ருப்பை ஒன்றாய்ப் பொங்கியுண்ண‌லும்
    ம‌ருத‌னில‌த்திலே செந்நெல் முத‌லிய‌ ப‌ல‌வ‌கை உண‌வுப் பொருள்க‌ளின் வ‌ள‌ங்க‌ளும்
    த‌ச்ச‌ர்க‌ள் வீட்டுச்சிறுபிள்ளைக‌ள் சிறுதேருருட்டி விளையாடலும்
    செவிலித்தாயின் முலைப்பாலுண்டு துயில்கொள்ளுமிய‌ல்பும்
    தொழில் செய்வார் வெள்ளிய‌ நெற்சோற்றோடு கோழியூனை க‌ல‌ந்துண்ட‌லும்
    வ‌லைஞ‌ர்க‌ள் கொழிய‌ல‌ரிசியிலிருந்து செய்த‌ க‌ள்ளினை இறைச்சியோடு உண்ண‌லும்
    த‌மிழ்ப்பார்ப்பார் வீடுக‌ளிலே க‌ற்புடைப் பெண்டிர் உய‌ர்ந்த‌ நெல்லுண‌வும், மாதுள‌ங்காய், மிள‌குப்பொடி, க‌ருவேப்பிலை, வெண்ணெய் இவைக‌ளைக் க‌ல‌ந்து செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌றியோடு
    மாவ‌டு ஊறுகாயும் இடுத‌லும்
    ம‌க‌ளிர் ப‌ந்தாட்ட‌மும், க‌ழ‌ங்காடுத‌லும், பெரிய‌ மாட‌ங்க‌ளின் மீதேற்றிய‌ விள‌க்கு
    ம‌ர‌க்க‌ல‌ங்க‌ளுக்கு ஊரின் க‌ரையைக் காட்டிக் கூவுந்த‌ன்மையுடையன‌ என்றும்

    “விண்போர‌ நிவ‌ந்த‌ வேயா மாட‌த்
    திர‌லின் மாட்டிய‌ வில‌ங்குசுட‌ர் ஞெகிழி
    உர‌வுநீ ர‌ழுவ‌த் தோடுக‌ல‌ங் க‌ரையும்"

    என்றெல்லாம் பாட‌ப்ப‌ட்டு ச‌ங்க‌ப்பாட‌ல்க‌ள் வ‌ர‌லாற்றுபேழைக‌ள் ஆகின‌.

    கீதா சாம்ப‌சிவ‌ம் பாட‌ல்க‌ள் ஆகாத‌ பின்னே !
    ------------------------------------------

    @ simmakkal

    Thank you very much for your complimentary comments.Could I also bring to your kind attention that I am Geetha Mathivanan and not Geetha Sambasivam you've mentioned about.

    ReplyDelete
  25. Anonymous said...

    என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே!

    ithu aar eluthiyathu ? superbly composed

    Bharathi daasan maathirilla irukku

    Simmakkal
    (Jo.Amalan)
    ------------------------------------------------
    நன்றி அமலன். இந்த வரிகள் என் எண்ணத்தில் உதித்தவையே.

    ReplyDelete
  26. அன்பின் கீதா - அருமை அருமை

    என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே! - மிக மிக இரசித்தேன்.

    நமது இளம் வயதில் எப்படிப் பொழுதினைக் கழித்தோம் என்பதனை அழகாக கவிதையாக வடித்த விதம் நன்று. கவிதை நயம் - எளிதான சொற்கள் - நல்வாழ்த்துகள் கீதா - நட்புடன் சீனா

    ReplyDelete
  27. சொல்ல மறந்து விட்டேனே - தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் நன்றாகவே இருந்தன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. அருமையா இருக்குங்க .
    தீப்பெட்டி தொலைபேசியையே என்ன ஆனந்தத்தோடு வைத்து விளையாடுவோம் நாம் ,
    இந்த தலை முறை உண்மையிலே பாவம்
    நின்டெண்டோ /i phone /x box இதெல்லாம் பிள்ளைகளை யோசிக்க விட மாட்டேங்குது .தண்ணீர் தொட்டு வெடிக்க வைப்போமே ஒரு சிறு விதை
    அந்த காலம் இனி வருமா.

    ReplyDelete
  29. @ cheena(சீனா)

    ஊக்கம் தரும் கருத்தூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றிங்க சீனா.

    @ angelin

    உண்மைதான் ஏஞ்சலின். நம் இளமைக்கால விளையாட்டுகளில் உடலுக்கும் மூளைக்கும் ஒத்த உழைப்பு இருந்தது. இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு மூளை உழைப்பு மிக அதிகம். அந்த அளவுக்கு உடல் உழைப்பு இல்லாமல் obesity தான் உண்டாகிறது.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.