(1)
சுவர்தொட்டுத் திரும்பும்
குழந்தையைத் துரத்துகிறது நிழல்
ஓடிப்பிடித்து விளையாட்டு.
(2)
எந்தப்பக்கம் விழுவது…
திகைப்பில் நிழல்
எல்லாப்பக்கத்திலிருந்தும் ஒளி.
(3)
பிடித்தபிடி விடவில்லை
நிழலின் கரத்தை நிஜம்
இருள்பயம்.
(4)
நடந்து நடந்து
ஆயாசமானது நிழல்
அசையாதிருந்தது பாறை.
(5)
இருள்கவியத் தொடங்கியதும்
சட்டெனத் தழுவிக்கொள்கின்றன
நிழல்கள் ஒன்றையொன்று.
(6)
நிஜத்தின் பின்னே
ஒளியும் நிழற்குழந்தை
ஒளிக்கூச்சமாம்.
(7)
வெயில் சுமந்து சுமந்து
வெளுத்துப்போனது குடை.
வெளுக்கவில்லை நிழல்.
(8)
இருளில் மடிந்து
ஒளியில் உயிர்க்கும்
நிழலோடு நித்தம் சமர்.
(9)
விரட்டினாலும் விலகாது
கால்பற்றி இறைஞ்சுகிறது
போக்கிடமற்ற நிழல்.
(10)
ஒளியில் ஒளியும் நிழல்
நிழலில் ஒளியும் நிழல்
ஒளியில் ஒளியும் ஒளி
******
அனைத்துக் குறுங்கவிதைகளும் பிரமாதம்.
ReplyDeleteரசிக்கவும் புன்னகைக்கவும் வைத்தன :)!
ரசித்தமைக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteகுட்டி குட்டி பூக்கள் ,,ரசிக்க வைத்தன ...
ReplyDeleteநிழல் என்னும் மூன்றேலுத்தின்
பல பரிணாமங்கள்
ஒளிக்கு உள்ளேயும்
ஒளிக்கு வெளியேயும்
அழகான பின்னூட்டத்துக்கு நன்றி அனு.
Deleteகுறுங்க் கவிதை ரசிக்க வைத்தது.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி கோமதி மேடம்.
Deleteஅருமை...
ReplyDeleteரசித்தேன்...
ரசித்தமைக்கு நன்றி தனபாலன்.
Deleteஅருமை
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteகவிதைகள் அனைத்தும் சிறப்பு
ReplyDeleteமிகவும் நன்றி வெங்கட்.
Deleteரசித்தேன் கீதா. சின்னச் சின்னப் பூக்கள்.....
ReplyDeleteரசித்தமைக்கு மிகவும் நன்றி தோழி.
Deleteஅத்தனையும் அருமை. மிக மிக ரசித்தோம்.
ReplyDeleteதுளசிதரன், கீதா
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.
Delete