21 February 2017

சாங் லாய் யுவான் சீனத்தோட்டம்



1. தோட்டத்தின் முகப்பு வளைவு


சிட்னி நகரின் வணிக மையத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் 90 ஹெக்டேர் நிலப்பரப்பில் விரிந்துகிடக்கிறது நுராஜிஞ்சி வனப்பகுதி (Nurragingy Natural Reserve) இதன் உள்ளே நுழைந்தவுடன் நம்மை வரவேற்கிறது சாங் லாய் யுவான் சீனத்தோட்டம் (Chang Lai Yuan Chinese garden) ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறதே.. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் ப்ளாக்டவுன் நகரமும் சீனாவின் லியாவோசங் நகரமும் 2003 முதல் சகோதர நகரங்களாகக் கைகோத்துள்ளன.

சரி, அதென்ன சகோதர நகரங்கள்? இரு நாட்டு மக்களிடையே நட்புறவு பேணவும், அவரவர் கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும், வியாபாரம், அரசியல், கல்வி, பொருளாதார மேம்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும். ஒத்த ரசனை உள்ளவர்களை ஒன்றிணைக்கவும் இதுபோன்ற sister cities அல்லது twin towns எனப்படும் சகோதர நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுபோல் உலகமுழுவதும் ஏராளமான சகோதர நகரங்கள் உள்ளன.


அப்படி உருவான சகோதரத்துவத்தின் அடையாளமாகத்தான் இந்த சீனத்தோட்டம் ப்ளாக்டவுன் நகராட்சியால் கடந்த 2012-இல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. லியாவோசங் நகரத்தின் பழைய பெயரான Dongchang-லிருந்து Chang, ப்ளாக்டவுனின் சீன மொழியாக்கமான Bu Lai Ke Cheng-லிருந்து Lai, தோட்டம் என்பதற்கு சீன மொழியில் yuan. உருவாகிவிட்டது Chang Lai Yuan. சீனமொழி தெரியாத நமக்குத் தெரியவேண்டும் என்பதால் கூடவே Chinese garden. சீனாவின் மாபெரும் அரச வம்சங்களான சிங் மற்றும் மிங் காலத்திய கட்டடக்கலையோடும் நுட்பமான ஓவியத்திறமையோடும் அழகான மரவேலைப்பாடுகளோடும் வடிவமைக்கப்பட்ட முகப்புகளும் மண்டபங்களும். நம்மை சீனாவுக்கே அழைத்துச்சென்றுவிடுகின்றன. சிறிய அளவிலான அருவியும், அலங்கார அருவிமண்டபமும், ஒரு பெரிய குளமும், அங்கு வாழும் ஏராளமான நீர்ப்பறவைகளும், பிற பறவைகளும்  அடந்த மரங்களும் இத்தோட்டத்துக்கு மேலும் அழகு சேர்ப்பவை..

நுராஜிஞ்சி வனப்பகுதியில் நுழைய அனுமதி இலவசம் என்பதோடு, ஆங்காங்கே குடிநீர்க்குழாய்கள், சுத்தமான கழிவறை, கார் நிறுத்துமிடம் போன்ற வசதிகளோடு தோட்டமும் அதைச் சார்ந்த பிற இடங்களும் வனப்பகுதியும் அழகாகப் பராமரிக்கப்பட்டு வருவதும் மனத்துக்கு மகிழ்வளிக்கும் விஷயம். அழகான இயற்கைச்சூழலில் திருமணங்களை நடத்துவதற்கு அழகிய கூடார அரங்குகளும் இங்கு உள்ளன என்பது கூடுதல் சிறப்பு.. மன அமைதிக்கு ஏற்ற இடமாக இருப்பதால் காப்பகங்களிலுள்ள முதியோர், தாங்களாகவே இயங்க இயலாதோர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை அடிக்கடி இங்கு பிக்னிக் போல அழைத்துவந்து செல்கின்றனர். அப்போது அவர்களுடைய முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 

கண்ணில் காட்சிப்பதிவான அத்தனையையும் அள்ளிவர இயலாக் காரணத்தால் கருவியில் அகப்பட்டதை மட்டும் இங்கு அளவோடு பகிர்கிறேன்.. ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. 



2. தூரத்திலிருந்து ஒரு பார்வை


3. மண்டபத்தின் உள்ளிருந்து ஒரு பார்வை


4. அருவிமண்டபம்


5. மர விதானத்தில் அழகு ஓவியங்கள்..



6. அருவிமண்டபம் இன்னொரு பரிமாணம்



7. மர விதானத்தில் வேலைப்பாடுகள்


8. விதான ஓவியங்கள் ஒரு தொகுப்பாக.. 


9. விதான ஓவியங்கள் இன்னொரு தொகுப்பு...


10. புலியை வெறுங்கைகளால் எதிர்கொள்ளும் வீரன்


11. முகப்பு வளைவில் சிற்ப உருவங்கள்..

12. (நம்மூர் கோபுர பொம்மைகள் நினைவுக்கு வருகின்றனவா)



13. அலங்கார மண்டபம்


14. கூரை வேலைப்பாடுகள்



15. முழுவதும் மரத்தாலான கலையழகு



16. மண்டபத்தின் உள்ளிருந்து வெளியே.. 


17. அழகிய  சலவைக்கல் பாலம்


18. அருவி மண்டபம் 


19. அருவிமண்டபத்திலிருந்து முகப்பும் மற்றொரு மண்டபமும்

20. தோட்டத்திற்குப் போகும் வழியில்...


ஏராளமான பறவைகள் இருந்தன என்றாயே.. பறவைப்பிரியையான நீ அவற்றையெல்லாம் எப்படிப் படமெடுக்கத் தவறினாய் என்று கேட்கிறீர்களா... படமெடுக்காமல் இருப்பேனா.. வளைத்து வளைத்து எடுத்துவிட்டேனே.. அவற்றை தனிப்பதிவாகவே போடலாம். எனவே அடுத்த பதிவில்.. நுராஜிஞ்சி வனப்பகுதிவாழ் பறவைகள் மட்டும். :)))


20 comments:

  1. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  2. அனைத்து புகைப்படங்களும் மிக அழகு! முக்கியமாய் சீன வேலைப்பாடுகளும் ஓவியங்களும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. எவ்வளவு நுட்பமான ஓவிய வேலைப்பாடுகள்.. பிரமிக்க வைக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  3. எல்லா படங்களும் வெகு அழகு , அடுத்து பறவைகளை காண ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி மேடம். இன்று பறவைகள் படங்கள் பதிவிட்டிருக்கிறேன்.

      Delete
  4. என்னவொரு அழகான இடம்...!!!

    ReplyDelete
    Replies
    1. அமைதியான இடமும் கூட.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  5. எல்லாப் படங்களும் மிகவும் அருமை + அழகு. செய்திகளும் சிறப்பாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  6. அருமையான படங்களுடன்
    அழகான இட அமைவை
    சிறப்பாகப் பகிர்ந்தீர்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  7. படங்கள்அருமை
    அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. சகோதர நகரங்கள் செய்தி புதிது. இது போல் இந்தியாவின் சகோதர நகரம் எங்கேனும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? படங்கள் அழகு! சிற்பங்களை ரசித்தேன். சீனாவுக்குச் சென்று பார்த்தது போல் உள்ளது. ஓவியங்களும் பளிச்சென்று உள்ளன. பகிர்வுக்கு நன்றி கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.. இந்தியாவிலும் சகோதர நகரங்கள் உள்ளனவாம். சென்னைக்கு ஏழு சகோதர நகரங்கள் உள்ளன. கீழே அதற்கான இணைப்பு கொடுத்துள்ளேன்.

      https://en.wikipedia.org/wiki/List_of_twin_towns_and_sister_cities_in_India

      Delete
  9. அழகிய காட்சிகளைக் கண்டு களிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  10. புகைப்படங்கள் நிகழ்விடத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.