8 June 2016

கருப்பு வெள்ளையில் கண்கவரும் பறவைகள்...



வாலாட்டிக்குருவி (willie wagtail)


ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie)



கருப்பு அன்னம் (black swan)
இறக்கைகளை விரிக்காதபோது.. 


கருப்பு அன்னம் (Black swan)
பறக்கும்போது  பளீரென வெளித்தெரியும் வெள்ளை இறகுகள்


ஆஸ்திரேலிய கூழைக்கடா (Australian pelican)




மண்கூட்டுக் குருவி (mud lark) அல்லது
மேக்பை குருவி (magpie lark)

வெண்புருவம் இருப்பின் அது ஆண் குருவி


வெண்புருவமற்றது பெண்குருவி


ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (Australian white ibis)




சாம்பல்வண்ண கசாப்புக்காரப்பறவை (Grey butcherbird)



கருப்பு வெள்ளை கரவாங் (pied currawong)



மஸ்கோவி வாத்து (muscovy duck)
அறிமுகப்படுத்தப்பட்டப் பறவையினம்



கருப்பு வெள்ளை நீர்க்காகம் (little pied cormorant) 




ஆஸ்திரேலிய பாம்புத்தாரா (Australian darter)




சிறிய கருப்பு நீர்க்காகம் (little black cormorant)






27 comments:

  1. பறவைகள் பலவிதம் ..... ஒவ்வொன்றும் ஒருவிதம்.

    அனைத்தும் அழகோ அழகு. :) பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  2. புருவம் நரைத்தது போல வெண்மையாக இருந்தால் ஆண் குருவியா?

    ரஸித்தேன். சிரித்தேன். :)

    ReplyDelete
    Replies
    1. அட, இப்படியொரு கோணமிருக்கிறதா... உங்கள் ரசனையை நானும் ரசித்தேன். நன்றி கோபு சார்.

      Delete
  3. ரசிக்க வைக்கும் புகைப்படப் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  4. அழகான பறவைகளை அழகாக படமெடுத்து அறிமுகம் செய்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  5. எல்லாம் நீங்கள் எடுத்த புகைப்படங்களா

    ReplyDelete
  6. நீங்கள் டுத்த படங்கள் என்றால் டபிள் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நான் எடுத்த புகைப்படங்கள்தாம். வருகைக்கும் இரட்டைப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  7. கண்கவரும் கருப்பு வெள்ளை பறவைகள் ! அழகழ‌கா எடுத்திருக்கீங்க கீதா !

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளைப் பறவைத் தொகுப்பை ரசித்தமைக்கு மிகவும் நன்றி சித்ரா.

      Delete
  8. 2 ம் படத்திலுள்ளது அந்த ஊர்க் காகமா?, 9 ம் படம் மீன்குத்திப் பறவை, நம் நாடுகளில் கண்கவர் வர்ணங்களில் இருக்கும். அழகான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மதுரன். இரண்டாவதாயிருப்பது காகமன்று.. மேக்பை எனப்படும் பறவை.. இதன் குரல் குயிலினும் இனியதாய் இருக்கும். 9-ஆம் படமும் நீங்கள் குறிப்பிடும் மீன்குத்தி கிடையாது. கசாப்புக்காரப் பறவை எனப்படுகிறது. கொன்றுண்ணி வகையைச் சார்ந்தது.

      Delete
  9. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. எல்லா பறவைகளும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  11. அருமையான படங்கள். அனைத்துமே அழகு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  12. ஒவ்வொரு படத்தையும், பெரிதாக்கி ரசித்தேன். நீங்கள் குடியிருக்கும் பகுதி மரங்கள் அடர்ந்த புறநகர்ப் பகுதியா? இவ்வளவு பறவைகளை படம் எடுத்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் படங்களைப் பெரிதாக்கி ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா. நாங்கள் குடியிருப்பது அபார்ட்மெண்ட்ஸ் எனப்படும் பன்மாடிக் கட்டடக் குடியிருப்புதான். கீழே கார் நிறுத்துதளம் அல்லாமல் மூன்று மாடிகள். ஆனால் வீட்டைச் சுற்றிலும் உள்ள யூகலிப்டஸ மரங்களோ அதற்குமேல் மூன்று தளம் உயரம்... எந்நேரமும் பறவைக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். மரங்கள் மிகுந்த உயரத்தில் இருப்பதால் கீழே இருந்து பறவைகளைப் படம்பிடிப்பது அரிது. இப்பறவைகளை எல்லாம் அருகிலிருக்கும் பூங்காக்களில்தான் எடுத்தேன். புல்வெளிகளிலும் நீர்நிலைகளின் அருகிலும் பலவிதமான பறவைகள் ஏராளமாய் காட்சிதரும். இயல்பிலேயே பறவை ஆர்வம் இருப்பதால் தேடிச்சென்று படம்பிடிக்கிறேன். தங்களுடைய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  13. வாவ்! அருமையான படங்கள் ரசித்தோம் ரசித்தோம் கண் குளிரக் கண்டு!! மீண்டும் காண்கின்றோம்....தலைப்ப்ம் அருமை. நீங்கள் மிக அழகாகப் புகைப்படம் எடுக்கின்றீர்கள் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமும் உற்சாகமும் தரும் உங்களுடைய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி கீதா & துளசி சார்.

      Delete
  14. புகைப்படம் ஒவ்வொன்றும் வெகுதுல்லியம்.

    அறியாத பறவைகளைக் கண்முன் நிறுத்தின படங்கள்.

    நன்றி.


    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சகோ.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.