28 September 2013

புரிதலுணர்வு



தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதுபோல்
பாவனை செய்கிறேன் நான்!
விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!

*********************************** 
(படம் நன்றி: இணையம்)

56 comments:

  1. துயில்தலும் எழுப்புதலுமான நாடகம் பற்றிய
    புரிதலுணர்வு ரசிக்கவைத்தது..

    ReplyDelete
  2. அழகிய கவிதை தோழி! அருமை!

    போலிதான் காதலின் உரமே!...
    பொய் அல்ல..:)

    படமும் கவிதையும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆழமான அன்பைப் பகிரும் தருணங்களில் இவ்வாறன
    பொய்களும் துணை நிற்பதே விந்தையானது .மிகவும்
    ரசிக்க வைத்த வரிகள் .வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  4. //விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
    எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
    பொய்யறப் புரிந்துகொண்டபோதும்//

    மிகவும் அழகான புரிதல் உணர்வு. ;)))))

    படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அழகிய கவிதை...

    ReplyDelete
  7. புரிதலில் புரிந்துபோகிறது புரியாமல்..

    ReplyDelete
  8. நல்ல படம். படத்திற்கேற்ற கவிதை..... ரசித்தேன்.

    ReplyDelete
  9. பாசப்பரிமாற்றம்.

    ReplyDelete
  10. விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
    எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
    பொய்யறப் புரிந்துகொண்டபோதும்//

    அற்புதமான வரிகள்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
    தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!//
    அழகான கவிதை வரிகள்.

    ReplyDelete
  12. சீக்கிரம் ஆட்டத்தை முடிங்கப்பா!!

    ReplyDelete
  13. உயரிய ரசனை கொண்ட கவிதை வரிகள்!- கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.

    ReplyDelete
  14. அழகிய கவிதை...அதற்கு,
    //பொய்யறப் புரிந்துகொண்டபோதும்// இவ்வரி சிகரம்!
    ரசியோ ரசி என்று ரசித்தேன் தோழி! வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. நாடகமாயினும் நல்ல போராட்டம்

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. போலிப் போராட்டம் மனதில் நச்சென்று ஓட்டிக் கொண்டது! சூப்பரு!

    ReplyDelete
  17. தூங்குவதும் துயிலெப்புவதும் தொடரட்டுமே/புரிந்துணர்வு கொண்ட போலிப்போராட்டம்.

    ReplyDelete
  18. பாசாங்கும் பாவனையும் ரசிக்கும் படியாக இருந்தது தோழி. போலியானலும் ஒரு மயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete

  19. துயிலாத துயில், உணர்த்த விரும்பாத துயிலெழுப்பல் ரசிக்க வைக்கிறது கவிதை,

    ReplyDelete
  20. சிறு கவிதை ஆயினும் சிறப்பான கவிதை . பாராட்டுகிறேன் .

    ReplyDelete
  21. உள்ளுணர்வுகளைப் பேசும் நல்ல கவிதை
    ".. பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
    தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,.." அருமை

    ReplyDelete
  22. // தொடர்கிறதோர் போலிப்போராட்டம்//
    எல்லா இடத்திலும் தான். அதுவும் காதலிக்கும்போது கூட. கவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. ரசிக்க வைக்கின்றது.

    ReplyDelete
  24. @இராஜராஜேஸ்வரி

    உடனடி வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  25. @இளமதி

    உடனடி வருகைக்கும் கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி இளமதி.

    ReplyDelete
  26. @Ambal adiyal

    வருகைக்கும் ரசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  27. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  28. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  29. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  30. @கே. பி. ஜனா...

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  31. @முனைவர் இரா.குணசீலன்

    தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி முனைவரே.

    ReplyDelete
  32. @வெங்கட் நாகராஜ்

    கவிதையை எழுதிமுடித்த பிறகுதான் படத்தைத் தேடினேன். sleeping beauty வெகு பொருத்தமாய் அமைந்துவிட்டது. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  33. @ஸ்ரீராம்.

    வருகைக்கும் கவிதையை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  34. @Ramani S

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  35. @கோமதி அரசு

    வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  36. @ராஜி

    ஹா..ஹா.. உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன் ராஜி. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  37. @Chellappa Yagyaswamy

    தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  38. @கிரேஸ்

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்டப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  39. @சீராளன்

    வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சீராளன்.

    ReplyDelete
  40. @பால கணேஷ்

    வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

    ReplyDelete
  41. @விமலன்

    வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் உளமார்ந்த நன்றி விமலன்.

    ReplyDelete
  42. @Sasi Kala

    வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகலா.

    ReplyDelete
  43. @G.M Balasubramaniam

    தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  44. @சொ.ஞானசம்பந்தன்

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  45. @Muruganandan M.K.

    தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி டாக்டர்.

    ReplyDelete
  46. @வே.நடனசபாபதி

    தங்கள் வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  47. @மாதேவி

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  48. தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!//உண்மை இதுதான் வாழ்க்கையின் அடையாளம்

    ReplyDelete
  49. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  50. ரசனையான வரிகள் சகோதரி. அழகான புரிந்துணர்வு இருந்து விட்டால் வாழ்வில் எல்லாமே சுகமானதாகி விடும். நல்ல பகிர்வுக்கு நன்றீங்க.
    அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  51. அழகிய கவிதை அக்கா

    Haafeeza

    ReplyDelete
  52. @அ. பாண்டியன்

    மிக்க நன்றி பாண்டியன். தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  53. @Haafeeza

    ரசித்தமைக்கு நன்றிமா ஹாஃபீஸா.

    ReplyDelete
  54. அன்புடையீர் வணக்கம்! இன்றைக்கு “ வலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள் “ என்ற எனது பதிவினில் தங்களது இந்த கவிதையை மேற்கோளாகக் காட்டி இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அகத்திணை சார்ந்த தற்காலக் கவிதைகளுள் என்னுடைய கவிதையும் தங்களைக் கவர்ந்திருப்பது மகிழ்வளிக்கிறது. மிகவும் நன்றி ஐயா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.