சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!
இருள் போர்த்திய இரவின் அமைதியில்
ஆகாயவெளியெங்கும்
செவிமடுத்துக்கிடப்பினும்
எண்ணற்ற குரல்வளையினின்று எழும்
இன்னிசையை
ஏனோ நம்மால் கேட்கவியலவில்லை.
சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!
சொர்க்கத்தில் கேட்டிருக்கலாம்
சொக்கவைக்கும் அவ்வினிய கானம்!
பூமிக்குத் தெரியவேண்டியது இதுதான்…
எண்ணிலா பனித்துளியாய் இறங்குவதெல்லாம்
விண்மீன்களின் மௌன அழுகைத்துளிகளே!
சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!
மேலே தேவர்கள்… கீழே மனிதர்கள்…
நடுவிருக்கும் ஆகாயத்தில்தான்
நடக்கிறது
கானமும் கரையலும்!
கானம் எப்போதும் உயரே சென்றிட,
கண்ணீர் மட்டும் பொழிகிறது கீழே!
சொல்கிறார்கள் நட்சத்திரங்கள் கானமிசைப்பதாய்!
(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் எழுதிய kehthe hain tharee gathe hain என்னும் இந்திக் கவிதை. அதீதத்தில் வெளியானது.)
//கானம் எப்போதும் உயரே சென்றிட,
ReplyDeleteகண்ணீர் மட்டும் பொழிகிறது கீழே!//
நான் மிகவும் ரஸித்த வரிகள்.;)))))
எப்படியாவது அந்தக்கண்ணீராவது [மழை[ பொழிந்தால் நல்லது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அருமையான கவிதை. சிறப்பான தமிழாக்கம் கீதா.
ReplyDeleteநல்லவங்க சிந்துற கண்ணீர்தான் மழைன்னு சின்ன வயசுல பெரியவங்க சொல்ல கேட்டிருக்கேன்
ReplyDeleteதமிழாக்கம் அருமை...
ReplyDeleteஅழகாக உள்ளது நட்சத்திரங்கள் கானமிசைப்பதை...
வாழ்த்துக்கள்... நன்றி..
This comment has been removed by the author.
ReplyDeleteகவிதை வரிகள் மட்டும் மேலே
ReplyDeleteஉணர்வுகள் மொத்தமும் கீழே
என் கவிபாடும் நட்சத்திரங்களைப்
புரிந்து கொள்ள நிச்சயம்
கவித்துவமான மனம் வேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் அருமையான
மொழி பெயர்ப்புக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteமொழியாக்கம் அருமை.
ReplyDeleteநம் அழுகை கூட பிறருக்கு அமுதமாகுமோ... நட்சத்திரங்களுக்கு ஆவது போல்...?!
//கானம் எப்போதும் உயரே சென்றிட,
ReplyDeleteகண்ணீர் மட்டும் பொழிகிறது கீழே//அருமையான வரிகள்!
சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteசிறப்பான மொழிபெயர்ப்பு கவிதை.
ReplyDeleteநன்றி கீதமஞ்சரி அக்கா.
ReplyDeleteமை கஹதா ஹூ ஆப் அச்சி ட்ரான்ஸ்லேட் கியே ஹை..
ஆஹா...! கவிதை பிரமாதம்! உணர்வை அருமையாய் மொழிபெயர்த்து தமிழ் நெஞ்சங்களுக்கு அழகாய் கடத்தியிருக்கீங்க. சூப்பர்ப்!
ReplyDelete@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மனம் நிறைக்கும் அழகிய கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் கனிவான நன்றி வை.கோ.சார்.
@ராமலக்ஷ்மி
ReplyDeleteவருகைக்கும் கவிதை ரசிப்புக்கும் மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி.
@ராஜி
ReplyDeleteஊரில் ஒருத்தர் நல்லவராய் இருந்தாலுமே அவங்களுக்காக ஊருக்கே மழை பொழியும் என்றார் ஔவையார். நல்லவங்களே பிறருக்காக தங்கள் கண்ணீரை மழையாய்ப் பொழிவது இன்னும் அவங்களுடைய உயரிய குணத்தைதான் காட்டுகிறது. கருத்துக்கு நன்றி ராஜி.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.
@Ramani S
ReplyDeleteகவிதை வரிகள் மட்டும் மேலே
உணர்வுகள் மொத்தமும் கீழே
முழுக்கவிதையின் கருத்தையும் இந்த இருவரிகளில் அழகாக உணர்த்திவிட்டீர்கள். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகமிக நன்றி ரமணி சார்.
@நிலாமகள்
ReplyDeleteஆகும் போலிருக்கிறதே... வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி நிலாமகள்.
@கே.பி.ஜனா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
@Ambal adiyal
ReplyDeleteவருகைக்கும் கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கும் அன்பான நன்றி அம்பாளடியாள்.
@அருணா செல்வம்
ReplyDeleteவருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி அருணா செல்வம்.
@G.M Balasubramaniam
ReplyDeleteये सब आप जैसे बड़ों के आशीर्वाद से ही होते हैं. बहुत बहुत धन्यवाद जी.
@பால கணேஷ்
ReplyDeleteவருகைக்கும் கவிதையையும் உணர்வையும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி கணேஷ்.