12 January 2017

தேன் மதுரத் தமிழச்சிக்கு நன்றி


தேன் மதுரத் தமிழால் நம் நெஞ்சங்களை வசீகரிக்கும் தோழி கிரேஸின் தளத்தில் என்னுடைய 'என்றாவது ஒரு நாள்' நூலுக்கான விமர்சனத்தை மிக அழகாக பதிவிட்டுள்ளார். 



அவர்வசமிருந்த புத்தகத்தை அங்கிருக்கும் அவருடைய நட்புகள் சிலரும் வாசித்துவிட்டுப் பாராட்டியதையும் தெரிவித்துள்ளார். தோழி கிரேஸிடமிருந்து கிடைத்துள்ள விமர்சனமும் பாராட்டும் ஒரு பக்கம் மகிழ்வளிக்கிறது என்றால் அவர் மூலம் முகம் அறியாத வாசகர்கள் சிலரையும் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்வளிக்கிறது. அன்பும் நன்றியும் கிரேஸ்.



ஆஸ்திரேலிய சிறுகதை எழுத்தாளர் ஹென்றி லாஸன் எழுதிய காடுறை மாந்தர்களைப் பற்றிய சிறுகதைத் தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘என்றாவது ஒரு நாள்’ என்ற நூலாக அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. நூலை வாசிக்க விரும்புவோர் தற்போது சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் நூலைப் பெறலாம்.. கிடைக்குமிடங்கள்…

அரங்கு எண்.35 - புலம்
அரங்கு எண்.409 - நூலகம் பேசுகிறது.
அரங்கு எண்.193 - டிஸ்கவரி புக் பேலஸ்


****** 

தோழி கிரேஸின் சமீபத்திய வெளியீடான 'பாட்டன் காட்டைத் தேடிகவிதைத் தொகுப்பும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண்கள் 622 & 623 ஆகியவற்றில் கிடைக்கிறது. கிரேஸின் கவிதைகளை வலைத்தளம் வாயிலாக நன்கறிவோம் என்றாலும் இந்நூல் குறித்த முத்துநிலவன் ஐயாவின் முன்னுரை நூலை வாசிக்கும் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டுகிறது.. மென்மேலும் உங்கள் படைப்பாக்கங்கள் வெளிவர மனமார்ந்த வாழ்த்துகள் தோழி.




கொசுறு…

நவம்பர் மாத ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழில் என்னுடைய ‘சிரிக்கும் கூக்கபரா’ கட்டுரை வெளியாகியுள்ளது.










இத்தகு அங்கீகாரங்களே படைப்பாளிக்குப் புத்துணர்வூட்டி எழுதுகோலைத் தொடர்ந்து கரமேந்தியிருக்கச் செய்கின்றன. அவ்வகையில் எனைச் சூழ்ந்திருக்கும் அத்தனை உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் பல. 





21 comments:

  1. //நவம்பர் மாத ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழில் என்னுடைய ‘சிரிக்கும் கூக்கபரா’ கட்டுரை வெளியாகியுள்ளது.//

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்.. தாமத பதிலுக்கு மன்னிக்கவும். இணைய இணைப்பு மந்தமாக இருப்பதால் தளம் திறப்பது தொடர் பிரச்சனையாகவே உள்ளது.

      Delete
  2. வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  3. எப்படி உங்களால் இத்தனையும் செய்ய முடிகிறது என வியப்பாக இருக்கு, மிக்க மகிழ்ச்சி, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எதையும் இன்னும் படிக்கவில்லை, படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைகள் வளர்ந்தபின் ஓரளவு நமக்கான நேரம் கிடைத்துவிடுகிறதே... :)) அன்பும் நன்றியும் அதிரா.

      Delete
  4. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா.

      Delete
  5. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சரவணன்.

      Delete
  6. Replies
    1. மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  7. அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தாமத பதிலுக்காக மன்னியுங்கள் மனோ மேடம்.. புதிய வீட்டில் இணைய இணைப்பு சரிவர இயங்காமையால் இங்கே முன்போல் வர இயலவில்லை.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  8. விமர்சனத்தை அங்கும் வாசித்தேன். பாராட்டுக்கள் கீதா! பூவுலகு இதழில் கட்டுரை வெளியானமைக்கும் பாராட்டு!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் பாராட்டுக்கு மிகவும் நன்றி அக்கா.

      Delete
  9. வாழ்த்துக்கள் சகோ/தோழி கீதா விமர்சனத்தை அங்கும் வாசித்துவிட்டோம் அருமையாக எழுதியிருந்தார்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் விமர்சனத்தை வாசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.

      Delete
  10. தாமதமாக வந்தமைக்கும் வருந்துகிறோம். இப்போது தமிழ்வலைப்பதிவக வாட்சப் குழுவில் இருந்து பதிவுகளை வாசிப்பதால் அங்கு வரும் பதிவுகள் முதலில் தெரிந்துவிடுகிறது....இப்போதுதான் பார்த்தோம் எங்கள் தளத்தின் சைட் பாரில் ....

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய இணைய இணைப்பு சரிவர இயங்காமையால் என்னால் வாட்சப் குழுமத்தில் இணைய முடியவில்லை.. இணைப்பு சரியானதும் வந்து இணைந்துகொள்வேன். வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.

      Delete
  11. வணக்கம்
    இருவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.