1 July 2015

படம் இங்கே கவிதை எங்கே?

வல்லமை இணைய இதழில் வாரந்தோறும் நடைபெற்றுவரும் படக்கவிதைப்போட்டி பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். நான் எடுத்த புகைப்படமொன்று இந்த வாரத்துக்கானப் போட்டிக்கென  வல்லமையின் பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கவிதையை வரும் சனிக்கிழமை (04-07-15)க்குள் எழுதி இங்கு சென்று பதிவு செய்யுங்கள்.  

படப்போட்டி (19) -க்கான படம் இதோ..



தமிழறிஞரும் வசீகரமான பேச்சாளரும் செழுமையான மரபுக்கவிஞருமான கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், வல்லமையில் இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டியின் நடுவர் ஆவார். கவியார்வமுள்ள யாவரும் பங்கேற்கவும் பாராட்டு பெறவும் என் இனிய வாழ்த்துகள். 

போட்டிக்கான இப்படம் ஆஸ்திரேலிய சீன நட்புறவின் அடையாளமாக சிட்னி நகரில் அமைக்கப்பட்டுள்ள சீனத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படத்தைத் தேர்ந்தெடுத்த சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் மிக்க நன்றி.

&&&&

(படக்கவிதைப்போட்டி (19) -இன் முடிவு இங்கே.)

22 comments:

  1. தங்கள் படம் தேர்வான தகவல்
    அதிக மகிழ்வளிக்கிறது
    நல்ல கவிதைக்கு அதிக வாய்ப்புள்ள படம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  2. கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! கலந்துகொள்ள முயற்சிக்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். நன்றி சுரேஷ்.

      Delete
  4. தாங்கள் எடுத்ததோர் படத்தினை கவிதைப்போட்டிக்கு வல்லமை நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். :) பாராட்டுகள். வாழ்த்துகள். இதைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    குறிப்பாக இந்தப்படத்தினை தெரிவு செய்த வல்லமை நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    படத்தைப்பார்த்ததுமே, எழுத்தில் வடிக்க, பல புதிய புதிய எண்ணங்கள் தோன்றத்தான் செய்கின்றன. :)

    //தமிழறிஞரும் வசீகரமான பேச்சாளரும் செழுமையான மரபுக்கவிஞருமான கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், வல்லமையில் இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டியின் நடுவர் ஆவார்.//

    இது, எல்லாவற்றையும் விட பெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. :)

    போட்டியின் நடுவர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வணக்கங்களையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்.

    இந்தப்போட்டியில் கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய ஊக்கம் தரும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  5. நீங்கள் அனுப்பிய படமே கவிதைப் போட்டிக்கான கருவா.? பேஷ் பேஷ், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தில் இடம்பெற்றுள்ள படங்களிலிருந்து போட்டிக்குரியவை தேர்வு செய்யப்படுகின்றன. இந்த வாரம் என்னுடைய இந்தப்படம் தேர்வாகியுள்ளது.

      Delete
  6. வல்லமை இணைய இதழில் போட்டிக்கென
    தாங்கள் எடுத்த புகைப்படமொன்று
    தெரிவு செய்யப்பட்டுள்ளமை
    பாராட்டுக்குரியது!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. வணக்கம்
    சகோதரி

    கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பான நன்றி ரூபன்.

      Delete
  8. வணக்கம்
    தங்களுக்கு வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  9. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  10. கவிதைப் போட்டிக்குப் படம் தேர்வானது அறிந்து பாராட்டுக்கள்!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.