ஒல்லுமோவென்று ஓயாத்தயக்கமேலிட
ஒன்றுஞ்செய்யாமல் ஒதுங்கிநின்று
ஒப்பேற்றுதலும் ஒரு வாழ்வாமோ?
வெறும்பேச்சிலே வீரமணைத்துங்காட்டி
செயல்தனிலே சுணக்கங்காட்டுவாரோடு
இணக்கங்கொள்வாரும் இச்சகத்திலுண்டோ?
எள்ளளவும் முயலாது, என்னாலிது இயலாதென
வெள்ளத்தில் மூழ்கும் வேளையிலும் கைகட்டி
வேதாந்தம் பேசி வீழ்வாரும் உண்டோ?
துடிப்புள்ளவனுக்குத் துரும்புமாயுதமாமென்றே
வருந்துயரங்கண்டு வெம்பாது,
வருந்தாது,
வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
வல்லாளனுக்கு
வாழும் வழியன்றோ?
வாழும் வழி சொன்னவிதம் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஒன்றுஞ்செய்யாமல் ஒதுங்கிநின்று
ReplyDeleteஒப்பேற்றுதலும் ஒரு வாழ்வாமோ?
பலநேரங்களை அப்படித்தான் கடக்கவேண்டியுள்ளது ..!
சோம்பேறிகளுக்கான சாட்டையடிக் கவிதை!
ReplyDeleteவள்ளுவர் காலத்துச் சொல்லை (ஒல்லுதல்) இந்த காலத்து தனது கவிதையில் எடுத்தாண்ட சகோதரிக்கு நன்றி!
ReplyDeleteஒவ்வொரு வரியும் அழகு! அருமை!
ReplyDeleteவாழ்த்துகள் தோழி!
முயற்சி திருவினையாக்கும் என்ற பதத்தின் பொருளை உணர்த்தி
ReplyDeleteநிற்கும் சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
தோழி .
துடிப்புள்ளவனுக்குத் துரும்புமாயுதமாமென்றே
ReplyDeleteவருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,
வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? //
அருமை.
நல்கவிதை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் ஒவ்வொரு வரிகளும் என் மனதில் தித்திக்குது.... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம 5வத வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாய்சொல் வீரர்களுக்கு நல்ல பாடம் மேடம்!
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும் முயற்சி உடையார் இலழ்ச்சி அடையார். நல்லதோர் பதிவு ரசித்தேன்
ReplyDelete''..வருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,
ReplyDeleteவெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? ...''
அருமையான கவி வரிகள் .
அசத்துகிறீர்கள் போங்கள்!.
மனமினித்த வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உளிதாங்கும் கற்களே சிலையாகும்..
ReplyDeleteவலிதாங்கும் நெஞ்சமே சபையேறும்...
சோர்வினை எரியூட்டி
நம்பிக்கை முனை பிடித்து
முயற்சியை வினையூக்கியாக்கும்
முட்டிமோதும் நெஞ்சமே
பின்னாளில் அரசாளும் -- என இயம்பும்
அற்புதமான கவிதை சகோதரி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
அன்பின் பூ - இரண்டாம் நாள்
நல்ல கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete//துடிப்புள்ளவனுக்குத் துரும்புமாயுதமாமென்றே
ReplyDeleteவருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,
வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? //
அழகும் அருமையானதுமான பொன் வரிகள்!! இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!
உண்மை தோழி .பலர் இப்போது ஒப்பேற்றிக்கொண்டு தான் வாழ்கிறார்கள் .கவிதை நன்று
ReplyDeleteவல்லமை வேண்டும் விழைவை தருகிறது கவிதை
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
@கவிப்ரியன் ஆர்க்காடு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிப்ரியன்.
@தி.தமிழ் இளங்கோ
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
@தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரேஸ்.
@அம்பாளடியாள் வலைத்தளம்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.
வல்லாளனாய் வாழ்ந்திட வேண்டுமென்ற முனைப்பை மனதில் பதித்திட்டது கவிதை! வெகுஜோர்!
ReplyDelete@பால கணேஷ்
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
@கோமதி அரசு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
@ஸ்ரீராம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
@2008rupan
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரூபன்.
@Mythily kasthuri rengan
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.
@G.M Balasubramaniam
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.
@kovaikkavi
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.
@மகேந்திரன்
ReplyDeleteஅழகான ரசனைமிகுந்த, ஆழமான பொருள்புதைந்த கவிப்பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மகேந்திரன்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதகவலுக்கு நன்றி தனபாலன்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதகவலுக்கு நன்றி தனபாலன்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.
@மனோ சாமிநாதன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.
@Geetha M
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி கீதா.
@நிலாமகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிலாமகள்.