30 November 2021

சுட்டிகளின் விநோத உலகம்

 


குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு மற்றும் குழந்தைகள் தினம் (2021) ஆகியவற்றை முன்னிட்டு கன்னிக்கோவில் இராஜா அவர்களின் லாலிபாப் சிறுவர் உலகத்துடன் இணைந்து சிறுவர்க்கான கதைப்போட்டியை கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி சுட்டி உலகம் அறிவித்திருந்தது. இதில் நாங்களே எதிர்பாராத அளவுக்கு நிறைய குழந்தைகள் கலந்துகொண்டு கதைகளை அனுப்பியிருந்தது மகிழ்ச்சியும் மன நிறைவும் அளித்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு இரண்டிரண்டு கதைகள் தெரிவானதே அதற்குச் சான்று.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கதைப்போட்டியின் முடிவுகள் குழந்தைகள் தினத்தன்று சுட்டி உலகத்தில் வெளியாயின. 

போட்டியில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் பாராட்டுகள். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்ற 5 கதைகள் மற்றும் ஊக்கப்பரிசு பெற்ற 8 கதைகள் என வெற்றி பெற்ற 13 கதைகளும் தினம் ஒன்றாக சுட்டி உலகத்தில் வெளியிடப்பட்டுவருகின்றன. 

எத்தனை விதமான கற்பனைகள்! எத்தனை விதமான கதைசொல்லல்கள்! சுட்டிகளின் விநோத உலகினை நீங்களும் ரசிக்க விரும்புகிறீர்களா?

கதைகளை வாசிக்க படங்களுக்கு மேலே உள்ள தலைப்புகளைச் சொடுக்கவும். கதைகளை வாசித்துக் கருத்திட்டு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம் வாங்க.

காணாமல் போன சிறகுகள்  

கிரீடம் 

இளவரசர் வீரதேவன் 

தேவதையின் கதை 

பைரவனின் பராக்கிரமம் 

மீனாவின் துணிச்சல் 

செவ்வாயில் ஓர் சாகசம்

அனுபவம்

காலத்திற்கு ஏற்ப ஓடு

காணாமல் போன ஐந்து கரடிகள் 

நண்பர்கள்






நன்றி!



4 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. எதிர்கால எழுத்தாளர்களின் ஆர்வம் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது.  வெற்றி பெற்றவர்கள், பங்குபெற்றவர்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  3. குழந்தை எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள். எங்கள் நான்கு வயது பேரனுக்கு படித்து காட்டுகிறேன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.