14 August 2012

பறத்தல் பறவையியல்!





திறந்திருக்கிறது சாளரம்!
பகல்களில் முட்டிமோதிய கதவது!
பற்பல கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

*****************

(22 ஆகஸ்ட் 2011 வல்லமையில் வெளிவந்தது)

61 comments:

  1. யோசிக்க வைக்கும் கேள்விகள்...
    இதில் நாளை கொண்டாடுகிறோம் சுதந்திர தனத்தை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...(TM 1)


    என் தளத்தில் : அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் அருமையானப் பின்னூட்டத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. நல்லதொரு படத்துடன் அருமையானதொரு கவிதை.

    பறவைகளாவது சுதந்திரமாக இயங்க வழிவகை செய்வோமாக!

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
    vgk

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துடனான பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

      Delete
  3. பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

    பழக்கம் பறவையின் இயல்பை மறக்கடித்ததோ !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  4. Anonymous14/8/12 14:20

    ம்ம்ம் . என் செய்வது அதற்கும்
    ஒரு சாண் வயிறு உள்ளதே ..
    எல்லாம் ஓர் வயிற்றுப் பிழைப்புத் தான் கீத்ஸ் ..
    அதனிடத்தில் தன்மான உணர்வு விட்டீர்கள் ...
    கேள்வி கேட்டு ... விரைவில் பறந்து விடும் பாருங்களேன் ..
    நல்ல படைப்பு. நீங்கள் சொன்னது பறவையா ? பரவையா ?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரவாணி.

      நான் குறிப்பிட்டது பறவைதான். பறப்பதால்தானே அதற்கு பறவை என்று பெயர். பரந்திருப்பதால் கடலைப் பரவை என்கிறோம்.

      Delete
  5. /இயல் மறந்த பறவையதற்கு
    பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?/

    மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  6. பெண்ணின் வசைபாடும் கீதமாக பறவை கண்முன்

    இயலாமையின் இருப்பு அறிய முடிகிறது வரிகளில்

    சொன்ன விதம் லயிப்பு தோழி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சரளா.

      Delete
  7. //பறத்தல் பறவையியல்!//

    தலைப்பே அருமை! அருமையான கவிதை தொடருங்கள்! (TM 2)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரலாற்று சுவடுகள்.

      Delete
  8. இயல் மறந்த பறவையதற்கு
    பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?//

    இயல் மற்ந்த..... சொல்லுக்குப்பின்
    எதையெதையோ இணைத்துப்பார்த்தேன்
    எல்லாம் சரியாகத்தான் பொருந்திப்போயிற்று
    ஒரு கவிதையாவது இத்தனை
    விஸ்தாரமான அர்த்தம் கொடுக்கக் கூடியதாய்
    எழுத வேண்டும் என்கிற ஆவலத்தூண்டிப்போனது
    இந்தப் படைப்பு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எத்தனை அருமையானக் கருக்களைக் கொண்டு படைப்புகளைப் பதிக்கும் படைப்பாளி தாங்கள்! தங்களுடைய கருத்துக் கண்டு நெகிழ்ந்துபோகிறேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  9. பாடல் வரிகள் பெண்மைக்கு உரியதா? பறவைக்கு உரியதா? சகோ.

    ReplyDelete
    Replies
    1. இயல் மறந்த எதற்கும், எவருக்கும் பொருந்தக் கூடியவை சசி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. அடைத்துவைத்துவிட்டால் இயல் மறந்து மரத்துப்போகுமா கீதா.... சிந்திக்க வைக்கிறது கவிதை !

    ReplyDelete
    Replies
    1. அப்படிதான் எனக்குத் தோன்றுகிறது. சங்கிலி அறுக்க முயன்று தோற்ற குட்டியானை, பெரிதான பின்னும் அதே சங்கிலியில் கட்டுண்டு கிடக்கிறதே...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

      Delete
  11. தன் ஒத்தவனின் இயலையே ஒடித்து வைத்தவன் அல்லவா மண்ணில் வாழ் ஆறறிவு மனிதன். பாவம் விலங்குகளும் பறவைகளும் என் செய்யும்.?சில விலங்கினங்கள் அவற்றின் இயல் அறிந்து . பலமறிந்து நடந்தால்...!அவற்றைக் குறைகூறல் சரியா.? சிந்திக்காத கருத்துக்கள் சில பின்னூட்டங்களில் காண்கிறேன். அவர்கள் உங்கள் உள்ளம் காண்கிறார்களா, கற்பனையில் களிப்படைகிறார்களா. ?
    சிந்திக்க வைக்கும் கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. ஒரு கவிதை பல வாயில்களைத் திறந்துபோனால் அது அக்கவிதைக்குப் பெருமைதானே... பல புதிய கோணங்களில் விரியும் கவிப் பொருளைக் கண்டு தங்களோடு நானும் வியக்கிறேன். தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா.

      Delete
  12. நிறைய சிந்தனைகளை கண் முன் நிறுத்த வைக்கும் பதிவு ..
    என் வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அரசன்.

      Delete
  13. // இயல் மறந்த பறவையதற்கு
    பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?//
    அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  14. அந்த கடைசி வரிகள்! இயல் மறந்தபறவை! வெகு அற்புதம்! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  15. //இயல் மறந்த பறவையதற்கு
    பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?//
    //

    சரியான கேள்வி ...அருமையான கவிதை வரிகள் .
    இதை படித்ததும் நான் நேரில் கண்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வருது கீதா .
    சில வருடமுன் கிளி ஜோசியக்கரரின் கிளி கூண்டை விட்டு வெளியே வந்து அட்டையை எடுத்து தந்துவிட்டு அவர் கொடுத்த அரிசி மணியையும் வாங்கிகொண்டு தானாகவே தனது கூடுக்கு சென்று உள்ளே அமர்ந்து கொண்டது (((.இயல்பை மறந்த பறவைகள் ..ஆனால் தனக்கு இறகு வெட்டபட்டிருப்பதை மறக்வில்லை ..

    ReplyDelete
    Replies
    1. \\இயல்பை மறந்த பறவைகள் ..ஆனால் தனக்கு இறகு வெட்டபட்டிருப்பதை மறக்வில்லை ..\\

      உண்மைதான். வாழ்க்கையை ஒற்றை நெல்மணிக்குப் பணயம் வைத்துவிட்ட சோதிடக் கிளிகளாய் எத்தனை பேர்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  16. /பறந்துசெல்லும் வழியறிந்தும்,
    பரந்த வானம் அழைத்தும்//


    இது நத்தையாய் தங்களுக்குள்ளே சுருங்கி /சுருக்கி இயல்பை மறந்த பெண்களை நினைவுபடுத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. இயல்பை மறந்த எவருக்கும் பொது என்றாலும் தன் திறமையறியாது வாழும் பெண்களுக்கு மிகவும் பொருந்தும்தான். கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.

      Delete
  17. //சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
    சிந்தை லயித்து நிற்கும்…//


    எனை அளவுக்கதிகமாய் யோசிக்க வைத்த வரிகள் :))

    ReplyDelete
    Replies
    1. இத்தனைப் பின்னூட்டங்கள் மூலமே அறிய முடிகிறது கவிதை உங்களைப் பாதித்திருப்பதை. நன்றி ஏஞ்சலின்.

      Delete
  18. பறவைகள் வெளியே வந்தால் தங்க மரமும், தின்ன பழங்களும் கிடைக்காதோ என்று கூண்டுள்ளேயே இருக்கிறதோ என்னவோ?

    நல்ல கவிதை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சித்திரவீதிக்காரன்.

      Delete
  19. இயல் மறந்த பறவையதற்கு

    அருமையான சொல் தேர்வு ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி பூங்குழலி.

      Delete
  20. துளிப்பா!

    65 ஆண்டுகளாக சுதந்திர கூட்டுக்குள்ளே
    வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்
    பறக்க முடியாமல் இல்லை
    பழக்க தோசத்தால்!!

    கீதமஞ்சரி அக்கா...
    சிந்திக்க வைத்த கவிதைங்க உங்கள் கவிதை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. துளிப்பாவால் கருத்தினை வெளிப்படுத்திய பாங்கை ரசிக்கிறேன். நன்றி அருணா செல்வம்.

      Delete
  21. இயல் மறந்த பறவையதற்கு
    பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?//

    இந்த வரிகள் அருமை.
    உருவக கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  22. அழகான படத்துடன் அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜலீலா.

      Delete
  23. Madam, I would like to share an award with you, Please visit to my Blog:

    http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    அன்புள்ள
    கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your kindness sir. I am really very proud to receive them. Thank you again.

      Delete
  24. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
    Replies
    1. Thank you very much madam. your effort is unimaginable. Thank you.

      Delete
  25. இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
    திறந்துவிட்டது சூறைக்காற்று

    வாய்ப்பைப் பயன்படுத்துவதின் அவசியம் அருமையாக வெளிப்படுத்திய கவிதை-பகிவிற்கு நன்றி! என்னுடைய வலைப்பூவில் சில புதிய பதிவுகள் இட்டுள்ளேன்
    நேரம் கிடைக்கும்போது படித்து தங்களின் கருத்தினைப் பதிய வேண்டுகிறேன்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காரஞ்சன். விரைவில் தங்கள் தளத்துக்கு வருகிறேன்.

      Delete
  26. Anonymous17/8/12 02:37

    ''....இயல் மறந்த பறவையதற்கு
    பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?..''

    அருமையான வரிகள்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.

      Delete
  27. அசரடித்தது கவிதை. பெண்மை என்ற ஒன்றைப் பறவையோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. மிகமிக ரசிக்க வைத்த கவிதை. நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

      Delete
  28. நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரம் ’வீட்டுக்குள்’ இன்னும் வரவில்லையோ?

    இந்தக் கவிதை பறவைகளுக்கு பெண்களுக்கு மற்றும் உரிமை மறுக்கப்பட்ட சகலருக்குமாக பொருத்திப் பார்க்க வல்லதாக இருக்கிறது. சுயசிந்தனைக்கு உணவிடுகிறது கவிதை.அது இந்தக் கவிதைக்கான நுண்ணிய அழகு போலும்! அழகு தோழி!

    /இயல் மறந்த பறவையதற்கு
    பறவையென்ற பெயரும் எதற்கு?
    பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?/

    ’பறவையென்ற பெயரெதற்கு?
    பக்கமிருக்கும் சிறகெதற்கு?’

    என்று சொல்லியிருந்தாலும் பொருந்திப்போயிருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. நுட்பமாய் கவிப்பொருளை சிலாகித்துக் கருத்திட்டமைக்கு நன்றி மணிமேகலா. நீங்கள் கூறியிருப்பது போல் இருந்தாலும் பொருத்தமாய்தான் இருக்கும். உம் சேர்த்தால் வார்த்தைகளுக்கு இன்னும் வலு கூடுமென்று நினைத்தேன். கருத்துக்கு நன்றி தோழி.

      Delete
  29. பறப்பது பறவையின் இயல்பு.அதை கூண்டுக்குள் அடைப்பது மனித இயல்பு.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றன் இயல்பை அடக்கி, இன்னொன்று தன் இயல்பைக் காட்ட, முன்னது தன் இயல்பையே மறந்துபோய்விடுகிறதே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன்.

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் மேடம். மிகவும் நன்றி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.