4 November 2015

அசுர லில்லி - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 15அசுர லில்லி (gymea lily)

நெருப்பு லில்லி, அசுர லில்லி, பெரிய ஈட்டிச்செடி என்றெல்லாம் குறிப்பிடப்படும் Gymea Lily - இன் தாவரவியல் பெயர் Doryanthes excelsa என்பதாம். Dory-anthes என்றால் கிரேக்கமொழியில் ஈட்டிப்பூ என்றும் excelsa என்றால் லத்தீன் மொழியில் அபூர்வமானது என்றும் பொருளாம்.

அண்ணாந்து பார்க்கவைக்கும் அபூர்வ செடிதான் இந்த அசுர லில்லி. 1மீ முதல் 2.5 மீ வரை நீளமுள்ள கத்தி போன்ற இலைகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 மீ. முதல் 8 மீ. உயரம் வரை வளரக்கூடிய தண்டின் உச்சியில் கொத்தாய் ரத்தச்சிவப்பில் பூப்பவை என்றால் அபூர்வமில்லையா? 70 செ.மீ. விட்டமுள்ள வட்டப்பூங்கொத்தில் சுமார் 150 பூக்கள் இருக்கலாமாம். அலங்காரப் பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் மலர்களிலேயே மிகப்பெரியது இந்த அசுர லில்லிதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு.


தேன்குடிக்கும் நாய்சி மைனர் பறவை

ஆளைக் கண்டதும் பறந்துவிட்டது

விதையிலிருந்து செடி உருவாகி பூக்கும் காலம் வருவதற்கு ஐந்து முதல் இருபது வருடங்கள் ஆகிறது என்றால் அபூர்வம்தானே? இதன் பூக்களிலிருந்து நறுமணத்தைலம் தயாரிக்கப்படுகிறது. இளஞ்செடிகளின் தண்டு மற்றும் வேர்ப்பகுதிகளை வாட்டி உண்ணும் பழக்கம் இங்குள்ள பூர்வகுடி மக்களிடம் இருந்தது அறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைத் தாயகமாய்க் கொண்ட இத்தாவரம், கடற்கரையோரங்களில் வளரக்கூடியது என்றாலும், நியூ சௌத் வேல்ஸில் மட்டுமே பெருவாரியாக விளைந்து காணப்படுகிறது.


சிட்னி துறைமுகப்பகுதியில் கம்பீரமாய்.. 

31 comments:

 1. அப்பப்பா... அபூர்வமோ அபூர்வம்!

  செடி அபூர்வம், அதன் வளர்த்தி அபூர்வம், அதன் பூக்கள், அதன் நிறம், பருமன் அழகு என்று அனைத்தும் அபூர்வம் கீதா!

  ’ஆ’வென அபூர்வமாய்ப் பார்க்கின்றேன்!
  அருமையான தகவல்கள்!
  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  த ம வாக்குப் போடமுடியவில்லையே..:(

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. உடனடி வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டதற்கும் நன்றி தோழி. தமிழ்மணத்தில் இப்போதுதான் இணைத்தேன். நன்றி இளமதி. (அவசரத்தில் மைதிலி என்று நினைத்துக் குறிப்பிட்டுவிட்டேன். :)))

   Delete
  3. ஆகா.. அப்படியா.. நான் காணலியே..:)
   இதோ த ம வாக்கு இட்டாச்சு!..:)

   Delete
 2. நல்ல தகவல். இதுவரை நான் பார்த்ததில்லை. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் மட்டும் இருக்கும் மலராக இருக்குமோ!
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் செந்தில். ஆஸ்திரேலியாவிலும் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டுமே அதிகமாக வளர்கிறது. ஆனால் உலகின் பல நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதியாகின்றனவாம். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. அறியாத தாவரம் ஒன்று அறிந்துகொண்டேன்! படமும் விளக்கமும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 4. சிறிய பதிவு. தம +1. நம்மூர் இட்லிப்பூ உயரத்தில் வளர்ந்த மாதிரி இருக்குமோ!

  ReplyDelete
  Replies
  1. வெறும் படங்களாய்ப் பதிவிடுவதற்கு பதில் அவற்றைப் பற்றி சிறுகுறிப்பு தரலாமே என்று நினைத்தேன். சிறிய பதிவாகிவிட்டது. :)) வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். இது இட்லிப்பூ மாதிரி இல்லை. லில்லிப்பூக்கள் மாதிரியே தான் உள்ளது. கொஞ்சம் பெரியது.

   Delete
 5. துளசி: அருமையான தகவல். உங்கள் படம் மூலம் அறிய முடிந்தது.

  கீதா: இந்தப் பூவை இங்கு பெரிய ஓரிரு பொக்கே கடைகளில் பார்த்த நினைவு. பூ மட்டும். ஆனால் பூவின் அந்த இதழ்களை ஒரு வித அழகுடன் வரிசைப்படுத்தி அலங்கரிக்கின்றார்கள். சென்ட் தயாரிக்கவும் செல்வதையும் அறிய நேர்ந்தது. அரிய பூ என்றும். அதனால் விலை கூடுதலாம். அப்போது பெயர் அறிந்தாலும் இப்போதுதான் அதன் முழு தகவலும் அரிய தகவலும் - யம்மாடியோவ் 20 வருடம் பூப்பதற்கு...- அறிந்தோம். மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. @ துளசி - தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

   @ கீதா - அபூர்வ மலர் என்பதால் பராமரிப்பும் அதிகம். விலையும் அதிகம். வருகைக்கும் பூ பற்றிய விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி கீதா.

   Delete
 6. யம்மாடி... என்னவொரு உயரம்...!

  ReplyDelete
  Replies
  1. நல்ல உயரம்தான் தனபாலன். நான் சற்று தூரத்தில் இருந்த ஒரு மேட்டில் ஏறி நின்று படம்பிடித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. அழகிய பூ ரசித்தேன் சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பூவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 8. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 9. ஆத்தாடி எவ்ளோ பெரிய பூ அசரவைக்கும் பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா.. அவ்வளவு பெரிய பூவைப் பார்க்கும்போது வியப்பாகத்தான் உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete
 10. எங்கோ எழுத்தில் கண்ட பெயர் இன்றுதான் பூவைப் பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி சகோ என்னா ஒரு உயரம் அடி ஆத்தி ....?

  ReplyDelete
  Replies
  1. வியக்கவைக்கும் உயரம்தான்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீராளன்.

   Delete
 11. புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. களப்பணியில் இவ்வாறாகச் சென்று எடுப்பதில் கிடைக்கும் அனுபவங்களை நான் எதிர்கொண்டுள்ளேன். என்றும் மறக்கமுடியாதவை. தங்களது நூல் பற்றிய விமர்சனத்தை திரு கரந்தை ஜெயக்குமார் தளத்தில் கண்டேன். தங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள். நாங்களும் உடன் வருகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா. கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் தளத்தில் நூல்விமர்சனம் குறித்தத் தகவலுக்கும் மகிழ்வான நன்றி.

   Delete
 12. பூக்களின் ஊர்வலம்....அபூர்வம்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 13. என் வீட்டுப் பூவுக்கு ஃபுட்பால் லில்லி என்று பெயர் என்று நீங்கள் கூறியது நினைவுக்கு வருகிறது

  ReplyDelete
  Replies
  1. நினைவிருக்கிறது ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 14. இதுவரை பார்த்திராத பூ. படம் பார்க்கவே அழகாய் இருக்கிறதே...... நேரில் பார்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. நேரில் பார்த்தால் பிரமித்துப்போவீர்கள்.. எங்காவது தாவரவியல் பூங்காவில் காண நேரிடலாம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.